ETV Bharat / entertainment

Samantha: "கடினமான ஆறு மாதங்கள்" வைரலாகும் நடிகை சமந்தாவின் செல்பி! - நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம்

கடினமான ஆறு மாதங்கள் என்ற தலைப்புடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா வெளியிட்டு உள்ள செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Samantha
Samantha
author img

By

Published : Jul 9, 2023, 8:09 PM IST

ஐதராபாத் : கடினமான ஆறு மாதங்கள் என்ற கேப்ஷனுடன் நடிகை சமந்தா தனது ஆதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சை எடுத்தும் நடிகை சமந்தாவுக்கு குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சினிமாவை விட்டு ஒரு வருடம் விலகி இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள அவர் முடிவு செய்து உள்ளதாகவும், இதற்காக புதிய படங்களில் அவர் எதுவும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தன் இஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செல்பி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "நீண்ட மற்றும் கடினமான ஆறு மாதங்கள் இறுதிவரை உருவாக்கியதாக தெரிவித்து உள்ளார். முன்னதாக மும்பை விமான நிலையத்தில் காணப்பட்டார். வெள்ளை நிற டீ சர்ட் மற்றும் டெனிம் பேண்ட் அணிந்து, தலையில் தொப்பி மற்றும் முக கவசம் அணிந்திருந்த அவருடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் குவிந்தனர்.

Samantha
Samantha

சில ரசிகர்களை நோக்கி கையசத்த அவர் உடனடியாக விமான நிலையத்தை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் குஷி படத்தில் நடிகை சமந்தா நடித்து வருகிறார்.

குஷி படத்தின் இறுதி கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் அதற்கான படபிடிப்பில் கலந்து கொள்ள நடிகை சமந்தா மும்பை சென்று இருந்ததாக கூறப்படுகிறது. குஷி படத்தின் இரண்டாவது சிங்கிள் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தன் சமூகவலைதள பக்கத்தில் நடிகை சமந்தா பதிவிட்டு இருந்தார்.

பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து சிடாடல் படத்தில் நடிகை சமந்தா நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து நடிகை சமந்தா ஒராணடுக்கு சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே அவர் வேறெந்த புது படங்களிலும் ஒப்பந்தமாகவிலலி என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : Samantha: போட்டோவுக்கு போஸ் கொடுக்காத சமந்தா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.