ETV Bharat / entertainment

"மின்னும் தண்ணீரில் புதிய காதல்" - சிகிச்சைக்கு மத்தியில் போஸ்ட் வெளியிட்ட சமந்தா! - ஓய்வில் இருக்கும் நடிகை சமந்தா

Samantha: உடல்நிலைக் குறைவு காரணமாக சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்து வரும் நடிகை சமந்தா ரூத் பிரபு "தண்ணீரில் புதிய காதல்" என ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Samantha Ruth Prabhu
சமந்தா
author img

By

Published : Aug 20, 2023, 2:21 PM IST

ஐதராபாத்: தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமா துறையிலும் கலக்கி வருபவர் நடிகை சமந்தா. தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர் சமந்தா. அதைத் தொடர்ந்து, பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி என சமந்தாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். பல வெற்றித் திரைப்படங்களையும் கொடுத்துள்ளார். சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாமல் தோல்வியைத் தழுவியது எனலாம். இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு முன்னணி நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகாரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.

அந்த விவாகரத்துக்குப் பின்னர் சமந்தா பெரிய அளவில் சினிமாவில் நடிக்கவில்லை. இதற்கிடையில் இணையத்திலும் பல்வேறு சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வந்தார். கடந்த ஆண்டு சமந்தாவிற்கு மயோசிடிஸ் (myositis) என்ற தோல் சம்மந்தபட்ட நோய் இருப்பதாகவும், அதனால் உடலில் பல மாற்றங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து யசோதா மற்றும் சாகுந்தலம் படத்திற்கு பின்னர் சமந்தா உடல் நலத்தில் கவனம் செலுத்தப்போவதாகவும், சில நாட்கள் ஓய்வு எடுக்கப்போவதாகவும் தெரிவித்து ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டார். தமிழ்நாட்டில் உள்ள பல முக்கிய ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தார். பொதுவாகவே சமந்தாவிற்கு ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை என ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து 'குஷி' என்ற காதல் திரைப்படத்தில் நடித்து முடித்தார். மேலும் பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் ஸ்பை த்ரில்லர் தொடரான 'சிட்டாடல்' என்ற தொடரிலும், மேலும் பல படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். ஆனால் உடல்நிலை காரணமாக சமந்தா சில காலம் நடிக்க வரமாட்டார் எனவ தகவல்கள் வெளியாகி பரவின.

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த 'குஷி' திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்ட சமந்தா அந்த தகவலை உறுதிப்படுத்தும் படி நடந்து கொண்டார். மேலும் மயோசிடிஸ் நோயின் சிகிச்சைக்காக சமந்தா அமெரிக்கா செல்லப்போவதாகவும், பல மாதங்கள் அங்கேயே தங்கி சிகிச்சை பெற வேண்டி இருப்பதாலும், சிகிச்சைக்குப் பின்னும் பரிசோதனைக்காக அடிக்கடி அமெரிக்கா செல்ல வேண்டிய நிலை உள்ளது என்றும், விரைவில் திரைக்கு திரும்பி வருவேன் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் சமந்தா ரசிகர்கள் அனைவரும் நோயிலிருந்து விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என பிரத்திப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். என்னதான் சமந்தா திரைப்படத்தில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்தாலும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து கொண்டிருக்கிறார்.

தற்போது தனது இன்ஸ்டாகிராம பக்கத்தில் கையில் தண்ணீர் கிளாஸுடன் "புதிய காதல்" (New found love for sparkling water.. with new restrictions comes new discoveries) என ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் சமந்தா நடித்துள்ள குஷி திரைப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பாதயாத்திரையில் அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டி பரிசளித்த தொண்டர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.