சென்னை: பிரபல நடிகை சமந்தா, மயோடிசிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் சமூக வலைதளத்துக்கு புத்துயிர் தந்த சமந்தாவை, அவரது ரசிகர்கள் பேராதரவுடன் வரவேற்றுள்ளனர்.
அதில் ஒரு ரசிகர், "குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கை கடந்து செல்லும்போது, நானும் எனது சகோதரியும் ஒரு பெண்ணை முதன்மையாகக் கொண்ட படங்களின் பேனர்கள் இருப்பதை பார்த்தோம். தமிழ் சினிமா எவ்வளவு தூரம் வந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இது கற்பனை செய்ய முடியாததாக இருக்கும்" என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்த ட்வீட்டில் நயன்தாரா நடித்த 'கனெக்ட்', ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'டிரைவர் ஜமுனா' மற்றும் திரிஷா நடித்த 'ராங்கி' உள்ளிட்ட பட பேனர்களுடன் திரையரங்க வாயில் இருந்த புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இதற்கு சமந்தா ஹார்ட் எமோஜிகளுடன், "பெண்கள் எழுச்சி..!" என பதிலளித்து ட்வீட் செய்துள்ளார்.
-
🫶🏻🫶🏻🫶🏻🫶🏻
— Samantha (@Samanthaprabhu2) January 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Women Rising!! https://t.co/qR3N3OozK8
">🫶🏻🫶🏻🫶🏻🫶🏻
— Samantha (@Samanthaprabhu2) January 2, 2023
Women Rising!! https://t.co/qR3N3OozK8🫶🏻🫶🏻🫶🏻🫶🏻
— Samantha (@Samanthaprabhu2) January 2, 2023
Women Rising!! https://t.co/qR3N3OozK8
மேலும் ட்ரோல்களுக்கும் சமந்தா பதில் அளித்துள்ளார். சமந்தா நடிப்பில் யசோதா மற்றும் சாகுந்தலம் ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளை கைப்பற்ற உள்ளது.
இதையும் படிங்க: சல்மான் கானை சந்திக்க 1,100 கி.மீ. சைக்கிளில் சென்ற ரசிகர்