SS ராஜமௌலி இயக்கத்தில், முன்னணி நட்சத்திரங்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண், ஆலியா பட் ஆகியோர் நடிப்பில் வெளியான ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் நெட்பிலிக்ஸ், ZEE5 போன்ற ஓடிடி தளங்களை தொடர்ந்து ஹாட்ஸ்டாரிலும் வெளியாகி உள்ளது.
டிஸ்னி பிலஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்டிரீமாகி வருகிறது. இப்படத்தில் அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி, ஷ்ரேயா சரண் மற்றும் பல முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர்.
எம்.எம்.கீரவாணியின் அசத்தலான இசையும், மதன் கார்க்கியின் அட்டகாசமான வசனங்களும், பிரமாண்டமான காட்சியமைப்பும் திரைப்பட ரசிகர்களுக்கு அசாத்தியமான சினிமா அனுபவத்தை கொடுக்கும். பான் இந்தியா படமாக வெளியான இத்திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது?