மும்பை: இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரையரங்குகளில் மாபெரும் வசூல் புரிந்தது.
மேலும், இந்திய அளவில் பல வசூல் சாதனைகளைப் படைத்தது. இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’, உலகளவில் மற்றுமொரு சாதனையையும் படைத்துள்ளது. ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ஹிந்தி பதிப்பு உலகளவில் ஒளிபரப்பானதில் மிகப்புகழ்பெற்ற ஹிந்தி படமென நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் சுமார் 3 மணி நேரம் இரண்டு நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படம் தற்போது வரை, 45 மில்லியன் மணி நேரங்களாக உலகளவில் பார்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ‘ஆர்.ஆர்.ஆர்’ உலகளவில் மிகவும் புகழ்பெற்ற இந்தியத் திரைப்படமென நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி எனப் பல மொழிகளில் உருவாக்கப்பட்டு ஓர் பான் இந்தியத் திரைப்படமாக உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியான, இந்தத் திரைப்படம் ரூ.1,200 கோடி ரூபாய் வசூலைக் குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'சாவையும் தாண்டிய புதிரோ இப்பாவையின் பார்வை..? ': ஜான்வி கபூர் புகைப்படத் தொகுப்பு!