ETV Bharat / entertainment

’பாவம் மூஞ்சி’ சத்யராஜை கொண்டு வர வேண்டும் என ஆர்.ஜே.பாலாஜி கூறினார் - நடிகர் சத்யராஜ் - sathyaraj

வீட்ல விசேஷம் திரைப்படத்தில் ’பாவம் மூஞ்சி’ சத்யராஜை கொண்டு வர வேண்டும் என ஆர்.ஜே.பாலாஜி கூறியதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

’பாவம் மூஞ்சி’ சத்யராஜை கொண்டு வர வேண்டும் என ஆர்.ஜே.பாலாஜி கூறினார்

author img

By

Published : Jun 16, 2022, 2:12 PM IST

நடிகர் சத்யராஜ் நடிப்பில் ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம் நாளை வெளியாகிறது. படம் குறித்து நடிகர் சத்யராஜ் கூறியதாவது, "இந்த ரீமேக் உருவாகும் முன்பே, பதாய் ஹோ திரைப்படத்தை நான் பார்த்துவிட்டேன், அதன் உள்ளடக்கம் மற்றும் அதை வழங்கிய விதம் ஆகியவற்றால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ஆனால், ரீமேக்குக்காக ஆர்.ஜே.பாலாஜி என்னை அணுகியபோது, அந்த கதாபாத்திரத்தை முழுமையாக என்னால் வெளிப்படுத்த முடியுமா என்று சற்று தயங்கினேன்.

ஏனென்றால், பார்வையாளர்கள் என்னை மென்மையான, முரட்டுத்தனமான மற்றும் கடினமான பாத்திரங்களில் பார்த்திருக்கிறார்கள், ஆனால் இந்தப்படம் அத்தகைய கதாபாத்திரத்தில் இல்லை. ‘பாவம் மூஞ்சி’ சத்யராஜை (அப்பாவி) கொண்டு வர வேண்டும் என்று பாலாஜி என்னிடம் சொன்னார்.

கவுண்டமணி உடன் நான் நடித்த சில வேடிக்கையான காட்சிகளை அவர் குறிப்பிட்டார், அதில் எனது கதாபாத்திரம் ஒரு அப்பாவி குழந்தையாக நடந்து கொள்ளும். அதேசமயம், என் பொம்முகுட்டி அம்மாவுக்கு படத்தில் வரும் என் கதாபாத்திர வடிவமைப்பை கொண்டு வர வேண்டும் என்று அவர் விரும்பினார். ஒரு இயக்குனருக்கு இவ்வளவு தெளிவு இருந்தால், அது நடிகர்களுக்கு எளிதான காரியமாகிவிடும். குறிப்பிடத்தக்க வகையில், இந்த பாத்திரத்தில் நடிக்க இது எனக்கு மிகவும் உதவியது. மேலும், ஊர்வசி ஒரு சிறந்த கலைஞர், மேலும் அவரது நடிப்பு திரையரங்குகளில் பெரிய பாராட்டுக்களை பெறும்.

தமிழ் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது, ​​“இந்தியா முழுவதும் கலாச்சார மற்றும் உறவுமுறை மதிப்புகளில் பெரிய வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. குடும்ப அமைப்பு முற்றிலும் ஒரே மாதிரியானது, அதை சித்தரிப்பதில் பெரிய வித்தியாசத்தை நான் உணரவில்லை. வீட்ல விசேஷம் திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பமாக பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வரும் என்று என்னால் உறுதியாக கூறமுடியும்" என்றார்.

இதையும் படிங்க: வீட்ல விசேஷம் திரைப்படத்தில் நடித்தது திருப்தி அளிக்கிறது - நடிகை ஊர்வசி புகழாரம்!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.