சென்னை: யெல்லோ பியர் புரொடக்ஷன் (Yellow Bear Production LLP) சதீஷ் நாயர் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் ஸ்டைலிஷ் திரில்லராக உருவாகியுள்ள படம் "ரெஜினா". இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழில் இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார். மலையாள போஸ்டரை பிரபல மலையாள டைரக்டர் ஆஷிக் அபு வெளியிட்டார்.
இப்படத்தின் மூலம் மலையாள இயக்குநர் டோமின் டி சில்வா தமிழில் அறிமுகமாகிறார். ரெஜினா படத்தின் பாடல்கள் சதிஷ் நாயர் இசையில் உருவாகியுள்ளது. பாடல்களுக்கான வரிகளை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.R எழுதியுள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, படம் குறித்து சுனைனா கூறுகையில், "ரொம்ப சாதாரண ஹவுஸ் வொய்ஃப் ஆக ரெஜினா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ரெஜினாவை சுற்றி நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள்தான் இக்ககதை. அவள் அதை எப்படி எதிர்கொள்கிறாள் என்கிற நெஞ்சம் பதபதக்கிற காட்சி படத்தை பார்க்க தூண்டும். டைரக்டர் டாமின் டி. சில்வா என் கேரக்டரை சூப்பராக வடிவமைத்திருக்கிறார்.
கதையை அவர் சொல்லும் போதே, இந்த படத்தை பார்க்க எனக்கே ஆவலை தூண்டியது. டைரக்டருடைய முந்திய ஹிட் படங்களான "பைபிள் சுவத்திலே பிராணயம்", "ஸ்டார்" போன்ற படங்களை விட "ரெஜினா" படத்தின் திரைக்கதையை ஸ்டைலாக அமைத்துள்ளார். எனது படங்களில் "ரெஜினா" முக்கியமான படமாக இருக்கும், என கூறினார்.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் செய்த படம் 'விக்ரம்' தான்- கமல்ஹாசன்