திங்க் ஸ்டுடியோ மற்றும் தீ ஷோ பீப்பில் நிறுவனங்கள் இணைந்து வழங்கும், இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிக்கும் படம் “கேப்டன்”.
'டெடி' என்ற பிரமாண்டமான படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்குகள் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மேலும் கேப்டன் திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பருந்தாகுது ஊர்க்குருவி' - விருதுகளைக் குவித்த சூரரைப் போற்று!