ஹைதராபாத்: தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான், வாரிசு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி ஆபாச வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதல பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டடு வந்தது.
இது குறித்து ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதள பக்கத்தில், “இணையத்தில் செயற்கை தொழில்நுட்பத்தை (AI) வைரலாகி வரும் deepfake வீடியோவை பற்றி பேசுவதற்கு வருத்தமாக உள்ளது. இந்த விவகாரம் எனக்கு பயத்தை உண்டாக்குகிறது. இன்று நான் ஒரு பெண்ணாகவும், நடிகையாகவும் என்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்களோடு பாதுகாப்பாக உணர்கிறேன். ஆனால் இது என்னுடைய பள்ளி அல்லது கல்லூரி காலங்களில் நடந்து இருந்தால் எப்படி சமாளிப்பேன் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை” என கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஷ்மிகா மந்தனாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த போலி வீடியோவில் இடம் பெற்றிருப்பது இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளி பெண் ஜாரா பட்டேல் என தெரிய வந்துள்ளது. அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் "எனது உடலையும், பிரபல பாலிவுட் நடிகையின் முகத்தையும் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் deepfake வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
எனக்கும் இந்த deepfake வீடியோவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வீடியோவால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். மேலும் சமூக வலைதளங்களில் பெண்களின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக உள்ளது. நீங்கள் சமூக வலைதளத்தில் காணும் ஒவ்வொரு செய்திகளையும் உண்மை பரிசோதனை செய்ய வேண்டும். இன்டர்நெட்டில் நீங்கள் பார்ப்பது அனைத்தும் உண்மையல்ல” என பதிவிட்டுள்ளார்.
-
yes this is a strong case for legal https://t.co/wHJl7PSYPN
— Amitabh Bachchan (@SrBachchan) November 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">yes this is a strong case for legal https://t.co/wHJl7PSYPN
— Amitabh Bachchan (@SrBachchan) November 5, 2023yes this is a strong case for legal https://t.co/wHJl7PSYPN
— Amitabh Bachchan (@SrBachchan) November 5, 2023
மேலும் இந்த போலி வீடியோ விவகாரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு திரைத்துறையை சேர்ந்த மிருனால் தாக்கூர், நாக சைதன்யா, சின்மயி உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், போலி வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள பஞ்சாயத்தா..! காப்பி சர்ச்சையில் கமலின் ‘தக் லைஃப்’