ETV Bharat / entertainment

"நல்ல படங்களுக்கு மொழி தடையில்லை" - ரன்பீர் கபூர்! - அனிமல் படம் ரிலீஸ் தேதி

Animal Movie Promotion: சென்னையில் நடந்த அனிமல் படத்திற்கான புரோமஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரன்பீர் கபூர், அனிமல் படம் அப்பா - மகன் செண்டிமெண்ட் படமாக இருக்கும் எனவும், நல்ல படங்களுக்கு மொழி தடையில்லை எனவும் தெரிவித்தார்.

Ranbir Kapoor said there is no language barrier for good films in Chennai Animal Movie Promotion event
அனிமல் பட நிகழ்வில் கலந்து கொண்ட படக்குழுவினர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 8:01 PM IST

சென்னை: அர்ஜூன் ரெட்டி படத்திற்குப் பின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள படம் 'அனிமல்'. இப்படத்தை டி சீரியல் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் அனில் கபூர், பாபி தியோல், பிரனீதி சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலிவுட்டில் சாக்லேட் பாயாக வலம் வந்த ரன்பீர் இந்த படத்திற்காக ரக்கர்ட் தோற்றத்தில் நடித்துள்ளது படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படம் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்தியா படமாக வெளியாகிறது. இதனை ஒட்டி இன்று (நவ. 26) சென்னையில் இப்படத்தை விளம்பரபடுத்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய ரன்பீர் கபூர், "ஜெயிலர், லியோ, விக்ரம் போன்ற 3 மிகப்பெரிய தமிழ் திரைப்படங்களை இந்தியாவின் டாப் திரைப்படங்களின் வரிசையில் கொடுத்ததற்கு நன்றி. அனிமல் தமிழ் டப்பிங், தமிழ் ரசிகர்களுக்காக இயக்குநர் சந்தீப் உள்ளிட்ட படக்குழுவினர் மிகவும் கடினமாக உழைத்துள்ளனர்.

டிசம்பர் 1ம் தேதி அனிமல் வெளியாகிறது, மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த படம் பண்ணும்போது நானும் அப்பா ஆனேன். படத்தில் உள்ள கேரக்டருக்கும் நிஜ வாழ்க்கையிலும் சற்று விசித்திரமாக இருந்தது. ஆனால் என்னால் ரீல் மற்றும் நிஜ வாழ்க்கையை வேறுபடுத்தி பார்க்க முடிந்தது" என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, அனிமல் படம் தென்னிந்திய படங்கள் போன்று ராவாக உள்ளதே என்ற கேள்விக்கு, இது இயக்குநர் இடம் இருந்து வந்தது. நான் பார்த்த இயக்குநர்களிலேயே உண்மையான படம் எடுப்பவர் சந்தீப். வழக்கமாக நாம் நடிக்கும் போது இது எந்த காட்சிக்கும் மற்ற படங்களின் ரெப்பரென்ஸ் இருக்காது எல்லாமே ஒரிஜினலாக இருக்கும்.

இந்திப் படங்கள் அதிகம் அம்மா - மகன் சென்டிமென்ட் படங்களாக இருக்கும். சமீபத்தில் கேஜிஎப் கூட அம்மா - மகன் சென்டிமென்ட் படம்தான். இந்த படம் அப்பா - மகன் சென்டிமென்ட் படம். இயக்குநர் சந்தீப் ஏதோ ஒரு விஷயத்தில் இன்ஸ்பையர் ஆகி இப்படத்தை எடுத்துள்ளார். தான் விரும்பும் ஒருவரை பாதுகாக்க மகன் எந்த எல்லை வரை செல்வான் என்பதே அனிமல் திரைப்படம் என்றார்.

தமிழ் ரசிகர்கள் பற்றி கேட்டபோது, பல வருடங்களாக தமிழ் ரசிகர்கள் சினிமாவை, இசையை, ஹீரோ, ஹீரோயின்களை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பல வீடியோக்களில் பார்த்திருக்கிறேன். இது எல்லாம் தான் எங்களுக்கு உந்துதலாக இருக்கிறது. ரஜினி, கமல், அஜித் , விஜய் இவர்களை திரையில் பார்த்து கொண்டாடுகின்றனர். அவர்களை ரொம்ப நேசிக்கின்றனர், சப்போர்ட் செய்கின்றனர். உலகில் எங்கிருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மிகவும் வலுவாக உள்ளனர்.

இந்தியாவில் அப்பா - மகன் உறவு என்பது கொஞ்சம் கருத்து வேறுபாடு நிறைந்ததாக இருக்கும். மரியாதை மற்றும் பயம் கலந்து இருக்கும். இப்படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் 500 கிலோ எடையுள்ள வார் மிஷின் பயன்படுத்தியுள்ளோம். அதை ஒரிஜினலாக தயாரித்துள்ளனர்.

முதல்முறையாக பார்க்கும் போது பயம்வந்துவிட்டது. நடிக்கும் நிஜ மிஷினை உண்மையாக சுட முடியாது. உங்கள் உடல் என்ன செய்யும் என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ள வேண்டும். நானும் உண்மையில் அப்படித்தான் கற்பனை செய்துகொண்டேன் என்றார்.

கரோனாவுக்கு பிறகு தமிழ் சினிமா, இந்தி சினிமா என்று இல்லாமல் எல்லாமே பான் இந்தியா சினிமா ஆகிவிட்டது என்ற கேள்விக்கு, இது நல்லது தான். நல்ல படங்களுக்கு மொழி தடையில்லை. அனிமல் திரைப்படம் நிறைய மொழிகளில் வெளியாகிறது. நிச்சயம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்று நம்புகிறேன் என்றார்.

இதையும் படிங்க: கல்யாணத்திற்கு அப்புறம் 3 ஹீரோயினுடன் படம்.. கீர்த்தி எதுவும் சொல்ல மாட்டாங்க - அசோக் செல்வன் கலகலப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.