'இரவின் நிழல்' ஒரு உலக சாதனை படம் - ரஜினிகாந்த் பாராட்டு! - இரவின் நிழல் திரைப்படம்
இரவின் நிழல் உலக சாதனை படம் என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
'இரவின் நிழல்' ஒரு உலக சாதனை படம் - ரஜினிகாந்த் பாராட்டு!
இயக்குநர் பார்த்திபன் இயக்கியுள்ள ’இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. உலகின் முதல் Non லீனியர் சிங்கிள் ஷாட் படமாக உருவாகியுள்ள இப்படத்தை பார்த்தவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். படத்தை பார்த்த ரஜினி, பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், “உலக சாதனை படைத்துள்ள நண்பர் பார்த்திபனுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.