ஹைதராபாத்(தெலங்கானா): தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று(ஏப்.24) ஹைதரபாத் விமான நிலையத்திலிருந்து துபாய் புறப்பட்டார். தனது ‘சர்காரு வாரி பாட்டா’ திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், மகேஷ் பாபுவின் இந்தப் பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலியும் மகேஷ் பாபுவும் இணைந்து பணியாற்றவிருக்கும் பிரம்மாண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மகேஷ்பாபுவுடன் இயக்குநர் ராஜமௌலி துபாய் பயணிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் இணையவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் கதை விவாதம் குறித்து பேச துபாய் செல்கின்றனர் என்றும் தெரிகிறது. ஏற்கனவே மகேஷ்பாபுவிற்காக இரண்டு கதைகளை தான் வைத்திருப்பதாக ராஜமௌலி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இளையராஜாவை கைப்பற்ற நினைப்பது அரசியல் சூழ்ச்சி - பா.இரஞ்சித்!