சென்னை : குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜமோகன், “அட்ரஸ்” என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், நடிகர் ஆர்கே.சுரேஷ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
ஆர்.கே. சுரேஷ்: இந்த விழாவில் பேசிய ஆர்.கே. சுரேஷ், “தாம் கே.ராஜனின் மினி வெர்ஷன்” என்று கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில், “மாமனிதன் இசை வெளியீட்டுவிழாவை ஏன் புதுச்சேரியில் வைத்தேன் என்று கேட்டனர். காரணமாகத்தான் அதற்கான விடை விரைவில் தெரியும். பெரிய தயாரிப்பாளர் சிறிய தயாரிப்பாளர் வித்தியாசம் இல்லை.
கே.ராஜனின் மினி வெர்ஷன்: முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்து விதமான வியாபாரத்தையும் சேர்த்து பார்த்தால் லாபம் வரும். இந்தப் படத்திற்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன்.
நான் கே.ராஜனின் மினி வெர்ஷன். மனதில் உள்ளதைதான் பேசுவேன். ஆயிரம் பேரையாவது வாழ வைக்க வேண்டும் என்றுதான் படம் எடுக்கிறேன்.
படம் தோல்வியுற்றால் கொண்டாட்டம்?: தயாரிப்பாளர் என்பவர் கடவுள். எந்தப்படமும் தேங்கி இருக்கிறதா பிரச்சினையில் இருக்கிறதா என்றால் அதனை முடித்து வெளியில் கொண்டுவரவே தயாரிப்பாளர் சங்கம் முயற்சித்து வருகிறது.
ஒருபடம் தோல்வி அடைந்தால் மற்றவர்கள் கொண்டாடுகிறார்கள். தற்போதைய சூழலில் 450 படங்களுக்குமேல் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. ஓடிடி தளங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
பெரிய படம் வாங்கினால் சில சிறிய படங்களையும் வாங்குங்கள். மற்ற மாநிலங்களில் சினிமாத்துறை தெளிவாக உள்ளது” என்றார்.
குமுறிய கே.ராஜன்: விழாவில் பேசிய கே. ராஜன், “பணம் முதலீடு செய்பவர்கள் பணம் வாங்குபவர்கள் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் விதிமீறி மேலே உள்ளவர்கள் நன்றாக உள்ளனர். நாங்கள் நன்றாக இல்லை. டப்பிங் முன்னரே முழு பணமும் கேட்டால் நாங்கள் எங்கே போக முடியும்.
நாங்கள் கஷ்டத்தை அனுபவித்தவர்கள். தெரியாமல் இந்த சினிமாவுக்கு வந்துவிட்டேன். பணம் வாங்கிய எவரும் திருப்பித் தருவதில்லை. தற்போது தமிழ் சினிமாவில் வியாபாரம் நன்றாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: விஜய்க்கு அண்ணனாகும் மைக் மோகன்..?