சென்னை: லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய மாஸ்டர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து லோகேஷ் விஜய் கூட்டணி மீண்டும் லியோ படத்தில் இணைந்தது எதிர்பார்ப்பை அதிகரித்தது. லியோ படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
-
Fireproof Box Office Records🔥 There's nothing you can do😁
— Seven Screen Studio (@7screenstudio) October 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
540+ Crores gross collection in just 12 Days 🦁#Leo Worldwide Badass Box Office Sambavam ❤️🔥#LeoIndustryHit#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial… pic.twitter.com/L3gRnU6jRm
">Fireproof Box Office Records🔥 There's nothing you can do😁
— Seven Screen Studio (@7screenstudio) October 31, 2023
540+ Crores gross collection in just 12 Days 🦁#Leo Worldwide Badass Box Office Sambavam ❤️🔥#LeoIndustryHit#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial… pic.twitter.com/L3gRnU6jRmFireproof Box Office Records🔥 There's nothing you can do😁
— Seven Screen Studio (@7screenstudio) October 31, 2023
540+ Crores gross collection in just 12 Days 🦁#Leo Worldwide Badass Box Office Sambavam ❤️🔥#LeoIndustryHit#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial… pic.twitter.com/L3gRnU6jRm
இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரித்துள்ளார். லியோ திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த 19ஆம் தேதி வெளியானது. லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. ரிலீசான ஒரே நாளில் கிட்டத்தட்ட ரூ.148 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் வசூல் கணக்கை வெளியிட்டது. லியோ திரைப்படம் உலகம் முழுவதும் பல்வேறு வசூல் சாதனை படைத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் லியோ படம் வெளியாகி ஏழு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.461 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தற்போது லியோ படம் வெளியாகி 12 நாட்களில் ரூ.540 கோடி வசூலித்துள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை விட அதிகம் என்று கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் வெளியான 12 நாட்களில் ரூ.520 கோடி வசூல் செய்திருந்தது என கூறப்பட்டது.
தற்போது லியோ திரைப்படம் ரூ.540 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி வரை வேறு பெரிய புது படங்கள் வெளியாகாது என்பதால் ஜெயிலர் படத்தின் வாழ்நாள் வசூலான ரூ.600 கோடியை லியோ திரைப்படம் எளிதில் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படம் வசூல் தொடர்பாக பல்வேறு மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் தயாரிப்பு தரப்பு அதுகுறித்து எதுவும் பேசாமல் தொடர்ந்து வசூல் நிலவரங்களை வெளியிட்டு வருகிறது. நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக லியோ படத்தின் வெற்றி விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. லியோ வெற்றி விழாவில் விஜய்யின் குட்டி ஸ்டோரியை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இதையும் படிங்க: "வெளிப்புறப் படப்பிடிப்பில் போலீசார் லஞ்சம் கேட்கிறாங்க" - தயாரிப்பாளர் கே.ராஜன் குற்றச்சாட்டு!