சென்னை: ஐயப்பன் எழுதி இயக்கிய 'கட்சிக்காரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (டிச.14) சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகத் தயாரிப்பாளர் கே.ராஜன் கலந்துகொண்டார். அப்போது, விழாவில் மேடையில் கே.ராஜன் பேசிக்கொண்டு இருக்கும் போது பயில்வான் ரங்கநாதன், ஏதோ பேச, தயாரிப்பாளர் கே.ராஜன்(K.Rajan) நடிகர் பயில்வான் ரங்கநாதன் இருவரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி திட்டிக்கொண்டனர்.
அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்த பிறகு, மீண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இருப்பினும், தயாரிப்பாளர் கே.ராஜன் நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஒருவரை ஒருவர் மாறிமாறி திட்டிக்கெண்ட வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: AudioLeak: ’உங்கள போலீஸ் அரெஸ்ட் பண்ணனும்..!’ : பயில்வான் ரங்கநாதனிடம் சுசித்ரா பேசிய ஆடியோ!