சென்னை: இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குனராக அறியப்படுபவர். இவரது முதல் படமான ‘ராஜா ராணி’ திரைப்படம் ஏற்கனவே பார்த்த பழைய கதையாக இருந்தாலும், அதனை தற்போது உள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையில் எடுத்து வெற்றி பெற்றிருந்தார்.
அதனை தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்து முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் அட்லி இணைந்தார். இதுவே அவருக்கு இந்தி திரையுலகின் முன்னனி நடிகரான ஷாருக்கானை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றுத்தந்தது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் அப்படத்திற்கு ஜவான் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது இணையம் எங்கும் “ஜவான்” திரைப்படம் பற்றிய பேச்சு தான் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. திரைப்படம் என்பது வாழ்வின் முக்கிய பகுதியாக மாறிவிட்ட நிலையில், புதிய திரைப்படங்களுக்கான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் உள்ளது.
மேலும், விருப்ப பட்டியலில் உள்ள நடிகர்களின் கூட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை சற்று அதிகமாக்கும். அந்த வகையில் ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி பிரியாமணி, சானியா மல்கோத்ரா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும் படத்தில் சஞ்சய் தத், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் கவுரவ வேடத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து ஷாருக்கானின் புகைப்படங்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஷாருக்கான் உயரத்திற்கு செல்ல அர்ஜுன் தாஸ்க்கு தகுதி உள்ளது :இயக்குநர் வசந்தபாலன்
இன்னும் டிரெய்லரே வெளியாகாத நிலையில், இப்படத்தின் தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் 250 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஷாருக்கானின் அதிரடி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள டிரெய்லர் மேலும் பல சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாருக்கான் படங்களுக்கான உரிமைகள் எப்போதும் பிரீமியமான விலையில் தான் விற்கப்படுகின்றன. அவரது திரைவரலாற்றில் ஒவ்வொரு படமும் அவரது முந்தைய படத்தின் சாதனையைத் தகர்த்து வருகிறது. மேலும், ஷாருக்கானின் வரவிருக்கும் இரண்டு படங்களின் வியாபாரத்தில் சொல்லப்படும் எண்கள் திரை உலகைத் திகைக்க வைக்கும் எண்ணிக்கையில் உள்ளது.
இதை ஷாருக்கின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌரி கான் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெற்றிமாறன் வெளியிட்ட 'படவா' முதல் தியேட்டரில் தீனிகளுக்கு 5% ஜிஎஸ்டி வரை.. இந்த வார சினிமா அப்டேட்கள்!