1979ல் வெளிவந்த அழியாத கோலங்கள் என்கிற தமிழ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன்(69) சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என நேரிலும் சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிரதாப் இறப்பதற்கு முன்னர் பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவுகள் வைரலாகி வருகின்றன.
அதில் அவர், ’கலை என்பது, அதிலும் குறிப்பாக சினிமாவில், மக்கள் அவர்களது இருப்பினை உறுதி செய்துகொள்ளவே முற்சிக்கின்றனர்’ என ஜிம் மோரிசன் கூறியதை பதிவிட்டுள்ளார்.
அதற்கு முந்தைய பதிவில், வாழ்க்கையின் நோக்கம் தான் என்ன என ஒருவர் பிரதாப் போத்தனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ”எனக்கு தெரியும், தற்போது உயிருடன் இருப்பது தான் என நினைக்கிறேன்” , என போத்தன் பதிலளித்துள்ளார். தன் இறப்புக்கு முன் பிரதாப்பின் இந்த பதிவுகளை சமூக வலதளங்களில் அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: என் இனிய பொன் நிலாவே...திரைத்துறையில் பன்முகம் கொண்ட பிரதாப் போத்தன்!!