ETV Bharat / entertainment

பிரபுதேவாவிற்கு இப்படி ஒரு நிலைமையா? - வருந்தும் ரசிகர்கள்!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த நடிகர் மற்றும் நடன இயக்குநர் பிரபுதேவா தற்போது திரைத்துறையில் மார்க்கெட் சரிவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பிரபுதேவாவிற்கு இப்படி ஒரு நிலைமையா வருந்தும் ரசிகர்கள்!

author img

By

Published : Aug 2, 2022, 3:39 PM IST

இந்தியாவில் முன்னணி இயக்குநராக, நடன இயக்குநராக கொடிகட்டிப்பறந்தவர் தான் பிரபுதேவா. இன்று இவரை கண்டுகொள்ளக்கூட ஆள் இல்லாமல் தனி ஆளாக சுற்றிக்கொண்டிருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக இவருக்கு வெற்றிப் படங்கள் எதுவும் இல்லை.

இவர் இயக்கிய சில இந்திப்படங்களும் தோல்வியடைந்தன. இதனால் இவர் படம் இயக்குவதும் இல்லை. பாடலுக்கு நடனம் மட்டுமே அமைத்துக்கொண்டிருக்கிறார். தற்சமயம் இவர் நடித்து தமிழில் எந்தப்படங்களும் வெற்றி பெறவில்லை. அதனால் இவர் மார்க்கெட் கீழே சென்றுள்ளது.

ஆனாலும் இவர் நடித்து தமிழில் ’யங்- மங்- ஜங்’, ’ஊமை விழிகள்’, ’ரேக்ளா’, ’லக்கி மேன்’, ’முசாசி’ என்று தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. இவருக்கு மார்க்கெட் இல்லாததால் இவர் படங்களை வெளியிட அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் தயங்குகின்றன.

நடனம், நடிப்பு, இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகத்திறமைகள் கொண்டு தொட்டதெல்லாம் வெற்றி கண்ட பிரபுதேவா, இன்று இருக்கும் இடம் தெரியாமல் இவருக்கென்று மார்க்கெட் ஏதுமில்லாமல் இருப்பது இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பாகப் பார்க்கப்படுகிறது. இதிலிருந்து இவர் எப்படி மீண்டு வரப்போகிறார் என்று தெரியவில்லை என்று ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகிறார்கள்.

முன்னதாக சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான 'மை டியர் பூதம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதையும் படிங்க: “எதிலும் தனி பாணி - அதுதான் பார்த்திபன்” - இரவின் நிழல் படம் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.