ETV Bharat / entertainment

அப்டேட் தராவிட்டால் தற்கொலை-பிரபாஸ் ரசிகர் மிரட்டல்..! - telugu actor prabas

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ’சலார்' படம் குறித்து எந்தவித அப்டேட்டும் இதுவரை வெளியிடப்படாததால் விரக்தி அடைந்த பிரபாஸின் தீவிர ரசிகர் ஒருவர் சலார் படக்குழுவுக்கு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

"சலார்" அப்டேட் கேட்டு ரசிகர் தற்கொலை மிரட்டல்!

author img

By

Published : May 16, 2022, 6:21 PM IST

கே.ஜி.எஃப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநராக உருவெடுத்துள்ளார் பிரசாந்த் நீல். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ’சலார்'. பாகுபலி நாயகன் பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.

இந்நிலையில் சலார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 30 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான ’ராதே ஷ்யாம்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதன் காரணமாக அவர் நடிப்பில் உருவாகி வரும் சலார் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

"சலார்" அப்டேட் கேட்டு ரசிகர் தற்கொலை மிரட்டல் கடிதம்

இந்நிலையில் ’சலார்' படம் குறித்து எந்தவித அப்டேட்டும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த பிரபாஸின் தீவிர ரசிகர் ஒருவர் சலார் படக்குழுவுக்கு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர், சமூக வலைத்தளத்தில் அதனை பகிர்ந்து இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் ’சலார்' படத்தின் தயாரிப்பாளரை டேக் செய்துள்ளார். அந்த கடிதத்தில் இந்த மாதத்திற்குள் ’சலார்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிடாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ராதே ஷ்யாம் வெளியான போது, அப்படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்ததன் காரணமாக பிரபாஸ் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்சினிமாவில் இதுபோன்று அப்டேட் தொல்லைகள் இருந்தாலும் ரசிகர்கள் தற்கொலை மிரட்டல் எல்லாம் விடுப்பதில்லை. சினிமா வேறு, நிஜவாழ்க்கை வேறு என்ற புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நீயே அரணாய் எனை ஆள... உடனிரு எந்நாளும் பாப்பி... அருண் உருக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.