ETV Bharat / entertainment

பொன்னியின் செல்வன் - பாகம் 2: ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Ponniyin Selvan Part 2

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் பாகம் 2 (PS-2) திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் - 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

author img

By

Published : Dec 28, 2022, 9:32 PM IST

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan). விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை தழுவி, இப்படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார்.

எம்ஜிஆர் தொடங்கி கமல்ஹாசன் வரை இப்படத்தை எடுக்க முயற்சித்து, முடியாமல் போனதை மணிரத்னம் எடுத்து சாதித்தார். முதல் பாகமாக வெளியான இப்படம் ரூ.500 கோடி வரை வசூலித்து சாதனைப் படைத்தது. லைகா புரொடக்சன்ஸ் மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருந்தது. விக்ரம், கார்த்தி உள்ளிட்டோரின் நடிப்பும் ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் படத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றது.

இப்படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் 2, அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று‌ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டாம் பாகத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

இதையும் படிங்க: கேரள நெய்யப்பம் 'கல்யாணி பிரியதர்ஷனின்' கண்கவர் புகைப்படங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.