மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
இப்படம் வெளியானது முதல் தற்போது வரை வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று இப்படத்தை கண்டுகளித்து வருவதால் தற்போது வரையிலும் திரையரங்குகளில் டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி திரையிடப்பட்ட அனைத்து பகுதிகளிலும் இப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
அதன்படி, தற்போது வரையிலும் உலகம் முழுவதும் இப்படம் 450 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன் மூலம் கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் படத்தின் வசூலை முந்தியுள்ளது. விக்ரம் படம் உலகம் முழுவதும் 430 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது. இதனை பொன்னியின் செல்வன் தற்போது முறியடித்துள்ளது.
இதன் மூலம் இந்த ஆண்டு தற்போது வரை அதிக வசூல் செய்த திரைப்படமாக இப்படம் உள்ளது. இன்னும் தீபாவளி வரை ஓடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் எப்படியும் வசூல் 500 கோடி ரூபாயை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ‘புயலுக்கு முன் அமைதி’ - தாய்லாந்த்-ல் இருக்கும் அஜித் குறித்து விக்னேஷ் சிவன் ட்வீட்