இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் நேற்று வெளியாகிய நிலையில், முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. திரிஷா, ஐஷ்வர்யா ராய், ஜெயராம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, ஐஷ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பெரும் நட்சத்திரப்பட்டாளம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் பல எதிர்பார்ப்புகளுடன் திரையரங்குகளில் வெளியாகியது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படம் வெளியாகி முதல் நாளிலேயே 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து தமிழ் சினிமா வராலாற்றில் சாதனை படைத்துள்ளதாக லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப்படம் தமிழ்நாட்டில் வலிமை மற்றும் பீஸ்ட் படங்களை அடுத்து, முதல் நாளில் ரூ.26 கோடியும், இந்தியாவில் ரூ.42 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது
இதையும் படிங்க: அன்பு இதயங்களுக்கு என் இதய நன்றி... நடிகர் விக்ரம் உருக்கம்...