சென்னை: ‘பேட்டைக்காளி’ வெளியீட்டு விழாவினை தொடர்ந்து இதன் ட்ரைய்லர் காட்சிகள் வலுவான உள்ளடக்கம் மற்றும் நடிகர்களின் திறமையான நடிப்பை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதன் டைட்டில், பாடல் பார்வையாளர்கள் மத்தியில் ஹைலைட்டாக அமைந்தது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார்.
இந்தப் பாடல் ‘பேட்டைக்காளியின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மேலும், ‘பேட்டைக்காளியின் உலகத்திற்குள்ளே பார்வையாளர்களை அழைத்து செல்லும் விதமாகஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ்ஸ் அங்கு திரையிடப்பட்டது.
‘பேட்டைக்காளி’ ஆஹா தமிழில் இந்த மாதம், அக்டோபர் 21 ஆம் தேதியில் அதன் முதல் எபிசோட் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு எபிசோட் வெளியாகி வர உள்ளது.
இனிவரும் வாரங்களில் வெளியாகும் அனைத்து எபிசோட்களும் நிச்சயம் பார்வையாளர்களுக்கு பிடித்ததாக அமையும். ஆஹா தமிழின் உறுதிப்படி 100% தமிழ் கண்டெண்ட் என்ற வகையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை இந்த முறையில் கையில் எடுத்துள்ளது.
இதுமட்டுமில்லாமல், ‘மாமனிதன்’, ‘டைரி’, ‘கூகுள் குட்டப்பா’, ‘மன்மத லீலை’, ‘ட்ரிகர்’ எனப் படங்கள் மட்டுமல்லாது, தங்களது ஒரிஜினல் கண்டெண்ட்டுகளான ‘இறை’, ‘11த் ஹவர்’, ‘அன்யாஸ் டுட்டோரியல்’, ‘மேட் கம்பெனி’ மற்றும் ‘பேட்டைக்காளி’ என பார்வையாளர்களுக்கான சிறந்த பொழுதுபோக்குத் தளமாகத் தன்னை முன்னிறுத்தி வருகிறது.
’பேட்டைக்காளி’ ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் வெப் சீரிஸ் ஆகும். ‘பேட்டைக்காளி’ உலக முலுக்க உள்ள காளைகளை அடக்குபவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் இடையே உள்ள பெருமை, வீரம், விளையாட்டுத் திறன் மற்றும் வரலாற்று பிரிவு போன்றவற்றை காட்சிப்படுத்துகிறது.
வளர்ப்பவர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பும், அடக்குபவர்களின் ஆக்கிரமிப்பும் முக்கிய உணர்ச்சிகளாக ’பேட்டைக்காளியில் இருப்பதால், ஜல்லிக்கட்டு விளையாட்டுக் குறித்தான அனுபவத்தை நிச்சயம் பார்வையாளர்களுத் தரும்.
பேட்டைக்காளியில் நடிகர்கள் கலையரசன், கிஷோர், வேலன் ராமமூர்த்தி, ஷீலா மற்றும் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ அந்தோணி ஆகியோரின் திறமையான நடிப்பு முன்னோட்டக் காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ல. ராஜ்குமார் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற இயக்குநரான வெற்றிமாறன் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு வேல்ராஜ் மற்றும் சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.
ஆஹாவின் சிஇஓ அஜித் தாகூர் வெளியீட்டு விழாவில் ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பேசியதாவது, “ஆஹா அதன் பார்வையாளர்களுக்கு 100% உள்ளூர் பொழுதுபோக்கு நிகழ்வுகள் உயர்ந்த தரம் மற்றும் வெவ்வேறு வகையான உள்ளடக்கங்களை கொடுக்க உறுதி ஏற்றுள்ளது.
தமிழ் பண்பாட்டின் கதைகளை தமிழ் பார்வையாளர்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் ‘பேட்டைக்காளி’ எங்களுக்கு மிகப் பெரிய படியாகும். இதற்கு முன்பு ஆஹாவில் வெளியான ‘அம்முச்சி கிராமம்’ பார்த்த அனைவருக்கும் நம் பாட்டியின் வீட்டுக்கு போய் சென்றதைப் போல பழைய நினைவுகளை ஏற்படுத்தும்.
அதேபோல, ‘பேட்டைக்காளி’ ரத்தம், வியர்வை, தமிழனின் பெருமை ஆகியவற்றின் கலவை. இதேபோல அடுத்து ‘ரத்தசாட்சி’ வைத்திருக்கிறோம். இது மற்றுமொரு சுவாரஸ்யமான கதையைக் கூற இருக்கிறது. அதைப் பற்றியும் விரைவில் பார்வையாளர்களுத் தெரியப்படுத்த இருக்கிறோம்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ‘பேட்டைக்காளி’ இணையத் தொடரின் இயக்குநர் ராஜ்குமார், “ஆரம்ப காலத்தில் மனிதர்கள் காடுகளில் சுற்றித் திரிந்தனர். காளைகள் அவர்கள் வாழ்வில் வந்த பிறகுதான் விவசாயம் மற்றும் வளர்ப்பு பற்றி அவர்கள் அறிந்து கொண்டனர்.
எனவே, காளைகள் மக்களின் வாழ்வில் வந்த பிறகுதான் கலாச்சாரத்தின் வருகை ஏற்பட்டது. முற்கால மனிதர்கள் காளைகளை அடக்கிய விதம் இன்றும் விளையாட்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் நாட்டிலேயே நம் மாநிலத்தில் மட்டும்தான் நடக்கிறது.
நமது கலாச்சாரத்தில் காளைகளின் முக்கியத்துவம் குறித்து பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜல்லிக்கட்டு உலகில் சொல்லப்படாத கதைகளை ஆராய்வதற்காகவும் இந்த இணையத் தொடரை உருவாக்கி உள்ளோம்” என்றார்.
’ஜிவி2’, ‘குருதி ஆட்டம்’, ‘மாமனிதன்’, ‘கூகுள் குட்டப்பா’, ‘மன்மதலீலை’, ‘ரைட்டர்’ மற்றும் வெவ்வேறு வகையிலான வித்தியாசமான கதைக்களத்தில் (’அம்முச்சி 2’, ‘எமோஜி’, ‘அன்யாஸ் டுட்டோரியல்’, ‘ஆகாஷ்வாணி’, ‘இறை’) என இவை எல்லாம் ஒரு நாளுக்கு ரூ.1 என்ற அடிப்படையில் ஆஹா 100% எண்டர்டெயின்மெண்ட் ஓடிடி தளம் மக்களின் தமிழ் பார்வையாளர்களுக்கு பிடித்தத் தளமாக மாறி வருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஹேப்பி தீபாவளி.. ஸ்டைலான பிளையிங் கிஸ்.. ரசிகர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு...