ETV Bharat / entertainment

பென்சில் பட இயக்குநர் மாரடைப்பால் காலமானார்...

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து வெளியான ‘பென்சில்’ படத்தின் இயக்குநர் மணிநாகராஜ் இன்று(ஆக.25) மாரடைப்பால் காலமான சம்பவம் திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’பென்சில்’ பட இயக்குனர் மாரடைப்பால் காலமானார்...!

author img

By

Published : Aug 25, 2022, 6:04 PM IST

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பென்சில்' படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக இன்று(ஆக.25) காலமானார். நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பென்சில்'. இந்தப் படத்தை இயக்குநர் மணி நாகராஜ் இயக்கியிருந்தார்.

இப்படத்தை அடுத்து கோபிநாத், அனிகா சுரேந்திரா, வனிதா விஜய்குமார், லீனா குமார், சீதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் 'வாசுவின் கர்ப்பிணிகள்' படத்தை இயக்கியிருந்தார். கடந்த ஜூலை 7ஆம் தேதியன்று இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்தப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில், இன்று(ஆக.25) அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 46 வயதான மணி நாகராஜ் திருச்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறப்புக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இவரது மறைவுக்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் ’என்னுடைய நண்பர் மணி நாகராஜ் உயிரிழந்த செய்தியை‌ நம்ப முடியவில்லை. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

  • Hard to believe My beloved friend director Mani Nagaraj is no more. My deepest condolences to the bereaved family and Friends. Rest in Peace my friend

    — G.V.Prakash Kumar (@gvprakash) August 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்கும் ஷங்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.