கடந்த சில நாள்களுக்கு முன்பு, உள்துறை அமைச்சர் அமித்ஷா அலுவல் மொழிகள் சம்மந்தமான கூட்டத்தில், அனைவரும் ஆங்கிலத்தைத் தவிர்த்து விட்டு இந்தியை இணைப்பு மொழியாக கற்க வேண்டுமெனப் பேசினார்.
இது பல்வேறு எதிர்வினைகளையும், ஆதரவுகளையும் சம்பாதித்தது. மேலும், அது சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பேசுப்பொருளாக மாறியது.
- — pcsreeramISC (@pcsreeram) April 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
— pcsreeramISC (@pcsreeram) April 12, 2022
">— pcsreeramISC (@pcsreeram) April 12, 2022
இது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ”தமிழ் தான் இணைப்பு மொழி” எனப் பதிலளித்தார். அவரது இந்தப் பதில் பல ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் சம்பாதித்து வருகிறது. குறிப்பாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் ஏ.ஆர்.ரகுமானிற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஏ.ஆர்.ரகுமானின் கருத்திற்கு ஆதரவு தரும் வகையில் ட்வீட் செய்துள்ளார். அவர் பதிவிட்ட ட்வீட்டில், ”தேசிய பறவையை தேர்வு செய்வதில் பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்தால் காகம் தான் நமது தேசியப்பறவையாக இருக்கும்” என்ற ஹிந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்ற கருத்திற்கு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணா அளித்திருந்த பதிலையும் மேற்கோள்காட்டியுள்ளார். இவரது இத்தகைய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.