ETV Bharat / entertainment

"21 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்துள்ளேன்" - திண்டுக்கல் லியோனி! - கருணாகரன்

21 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்துள்ளதாக திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார். 'பன்னி குட்டி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

21 வருடங்களுக்குப்பிறகு நடிக்க வந்துள்ளேன் - திண்டுக்கல் லியோனி!

author img

By

Published : Jul 5, 2022, 3:45 PM IST

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், Super Talkies சமீர் பரத் ராம் தயாரிப்பில், இயக்குநர் அனுசரண் இயக்கத்தில் உருவான படம் பன்னி குட்டி. இப்படத்தில் யோகி பாபு, கருணாகரன், திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்க துரை போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படம் ஜீன் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய லியோனி. "இந்த படத்தின் மூலமாக 21 வருடத்திற்கு பிறகு நடிப்பிற்கு திரும்ப வருகிறேன். இந்த படத்தில் என்னை தேர்ந்தெடுத்த இயக்குநருக்கு நன்றி. நான் சாமியார் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர், காரணமாக தான் என்னிடம் கொடுத்திருக்கிறார். எந்தவித பதட்டமும் இல்லாமல் இயக்குநர் அனுசரண் வேலை பார்ப்பார்.

“பன்னிக்குட்டி”, படக்குழுவினர்

கருணாகரனுக்கு இந்தபடம் பெரிய வெற்றியாக இருக்கும். அனுசரண், நடிகர்களிடம் இருந்து நடிப்பை வாங்குவதில் திறமைக்காரர். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். இந்த படம் அனைவருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை கொடுக்கும் படமாக இருக்கும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள் நன்றி.

பின்னர் பேசிய இயக்குநர் அனுசரண்,"எனக்கு வாய்ப்பு கொடுத்த லைகாவிற்கும், ஷமீருக்கும் நன்றி. வாழ்கையில் துவண்டு போன நிலையில் இருக்கும் போது, அதில் இருந்து மீண்டு வருவதற்காகவே காமெடி படம் கொடுக்க நினைத்தேன். ரவி முருகையாவின் கதை தான் இந்த ’பன்னிகுட்டி’. இந்த கதையை தயாரிப்பாளரிடம் கூறும் போது, அவருக்கு மிகவும் பிடித்து போனது.

“பன்னிக்குட்டி”, படக்குழுவினர்
“பன்னி குட்டி”, படக்குழுவினர்

படத்தில் லியோனி நடிக்க வந்தது மகிழ்ச்சியான ஒன்று. எல்லா நடிகர்களும் நெருக்கடியான சூழலில் நடித்து கொண்டிருப்பவர்கள், ஆனால் முழு அர்பணிப்பையும் கொடுத்து பணியாற்றினார்கள். இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் இந்த கதைக்கு என்னுடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். நிஜ பன்னி குட்டியுடன் படப்பிடிப்பை நடத்தினோம். அது மிகவும் கடினமாக இருந்தது.

விலங்குகளை வைத்து படம் எடுப்பது சாதாரண காரியம் இல்லை, பல நெருக்கடிகளை கடந்து, சில யுக்திகளை பயன்படுத்தி தான் படம் எடுத்தோம். உசிலம்பட்டியை சுற்றி இருக்கும் கிராம மக்களுக்கு நன்றி கூற வேண்டும், அவர்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி. இந்த படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது, ஒரு சிரிப்புடன் வெளியே வருவீர்கள். நம்பிக்கை தான் வாழ்க்கை என்பதை இந்த படம் கற்றுக்கொடுக்கும்.

“பன்னிக்குட்டி”, படக்குழுவினர்
“பன்னி குட்டி”, படக்குழுவினர்

இவரைத் தொடர்ந்து நடிகர் கருணாகரன் பேசுகையில், "ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்கு கிடைக்கும் போது, அந்த கதாபாத்திரத்திற்கு நான் தகுதியானவனா என்று யோசிப்பேன். இந்த கதையை இயக்குநர் கூறிய போது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தில் எல்லாருமே முக்கிய கதாபாத்திரங்கள் தான். இயக்குநருடைய பதற்றம் இல்லாத தன்மை, என்னை ஆச்சர்யப்பட வைத்தது.

இசையமைப்பாளர் இந்த படத்தில் கொடுத்திருக்கும் இசை, ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும். இந்த படம் நம்பிக்கை கொடுக்கும் படம். இந்த படத்தில் யோகிபாபு நடித்திருப்பது எங்களுக்கு சந்தோசம். படத்தை மக்களிடம் நீங்கள் கொண்டு போய் சேர்க்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் புதிய போஸ்டர்: வந்தியத்தேவனாக கம்பீர தோற்றத்தில் கார்த்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.