ETV Bharat / entertainment

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் 'இக்ஷு' - pan india film

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் தயாரிக்கப்பட்டுள்ள 'இக்ஷூ' திரைப்படம் வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது.

ண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் ’இக்ஷு

author img

By

Published : Aug 5, 2022, 12:54 PM IST

பத்மஜா பிலிம் பேக்டரி (Padmaja Film Factory) என்ற திரைப்பட நிறுவனம் சார்பில் ஹனுமந்த் ராவு தயாரிக்கும் பான் 'இக்ஷு' (IKSHU) திரைப்படம் பான் இந்திய அளவில் உருவாகி வருகிறது. விவி.ருஷிகா இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

படப்பிடிப்பு நிறைவுற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ராம் அக்னிவேஷ் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ராஜீவ் கனகலா, ’பாகுபலி’ பிரபாகர், சித்திரம் சீனு மற்றும் பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறது.

ஐந்து மொழிகளில் போஸ்ட் புரொடக்‌ஷனுக்குப் பிறகு படத்தின் முதல் பிரீமியர் திரையிடப்பட்டது. வணிக ரீதியாக அதில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் OTT உரிமைக்காக பிரபல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படம் செப்டம்பர் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதையும் படிங்க: பா.இரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.