பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இயக்குனர் மோகன். அவர் அடுத்ததாக ஜி.எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கும் படத்திற்கு "பகாசூரன்" என்று பெயரிட்டிருந்தார்.
இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான ’நட்டி’ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தின் டைட்டில்-லுக் இன்று (மே29) காலை 11 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இறுதிகட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவிருக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.