சென்னை: இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் கொமரம் பீமாக வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்திய ஜூனியர் என்டிஆர் இன்று (மே 20) 39ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான என்டிஆர்.30 படத்தில், இயக்குநர் கொரட்டாலா சிவாவுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.
இதற்கு முன்னதாக “ஜனதா கேரேஜ் (2016) படத்தில் நடித்திருந்தார். ஆர்ஆர்ஆர் படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு என்டிஆர் - கொரட்டாலா சிவா படத்தின் மீதுதான் மிகப்பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. "இது ஒரு உணர்ச்சிகரமான கதைகளத்துடன், மிகவும் சக்திவாய்ந்த திரைக்கதை கொண்டது" என்று இயக்குநர் கொரட்டாலா சிவா ஒரு பேட்டியின் போது கூறியுள்ளார்.
கொரட்டாலா சிவா, ஜூனியர் என்டிஆரின் என்டிஆர் 30க்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். என்டிஆர் நடித்த படத்தை லைம்லைட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதால், படத்தின் எந்த ஒரு அம்சத்தையும் அவர் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
என்டிஆர் பிறந்தநாளில் என்டிஆர் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் இருக்கும் என்று சமீபத்தில் இயக்குனர் கொரட்டாலா சிவா தெரிவித்தார். ரசிகர்களின் கொண்டாட்ட பெருநாள் இன்று விடிகிறது, சமூக ஊடகங்களில் ரசிகர்களின் வெறித்தனம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது.
ரசிகர்களின் ஆவலை கூட்ட, என்டிஆர் 30இன், தயாரிப்பாளர்கள் ஒரு பிரம்மாண்டமான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்போஸ்டரில் என்டிஆர் கர்ஜனை குரலில் மாஸ் டயலாக்கை பேச, அனிருத் நரம்பு துடிக்கும் பின்னணி இசையில் அதிரவைக்கிறார். எமோஷனுக்கான வசனங்களை உச்சரிப்பதில் என்டிஆர் சிறந்து விளங்குபவர் என்பது அனைவரும் அறிந்ததே.
என்டிஆர் 30 படத்தின் கதைக்கருவை சித்தரிக்க, கொரட்டாலா சிவா என்டிஆர் குரலை கச்சிதமாக பயன்படுத்தியுள்ளார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் மற்றும் ஒளிப்பதிவாளராக ஆர். ரத்னவேலு ஆகியோரின் கூட்டணியில் இந்த திரைப்படம் மிகப்பிரமாண்டமானதாக மாறியுள்ளது. புகழ்மிகு கலை இயக்குனர் சாபு சிரில் மற்றும் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோரும் தொழில்நுட்ப குழுவில் உள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
கொரட்டாலா சிவா மற்றும் என்டிஆர் கூட்டணி இணைந்து முன்பு 'ஜனதா கேரேஜ்' என்ற பிளாக்பஸ்டர் படத்தை தந்தனர். அப்படம் ஒரு சக்திவாய்ந்த சமூக கருத்துடன் வெகுஜன ஆக்சன் கமர்ஷியலை வழங்கியது. இந்த முறையும், இந்த கூட்டணி மிகப்பெரிய அளவில் ஒரு பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படத்தை தருவது உறுதி.
என்டிஆர் 31
இதனிடையே என்டிஆரின் 31ஆவது படத்தில் போஸ்டர் வெளியாகி பெரும் வருவேற்பை பெற்றுவருகிறது. கேஜிஎப் இயக்குநர் பிரசாந்த் நீல் உடன் கைகோர்க்கும் NTR 31 படத்தின் போஸ்டர் வெளியானது. ஏப்ரல் 2023-ல் இதன் படபிடிப்பு தொடங்க உள்ளது.
-
𝑻𝒉𝒆 𝒐𝒏𝒍𝒚 𝒔𝒐𝒊𝒍 𝒕𝒉𝒂𝒕 𝒊𝒔 𝒘𝒐𝒓𝒕𝒉 𝒓𝒆𝒎𝒆𝒎𝒃𝒆𝒓𝒊𝒏𝒈 𝒊𝒔 𝒕𝒉𝒆 𝒐𝒏𝒆 𝒔𝒐𝒂𝒌𝒆𝒅 𝒊𝒏 𝒃𝒍𝒐𝒐𝒅!
— Done Channel (@DoneChannel1) May 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
𝐇𝐢𝐬 𝐬𝐨𝐢𝐥,𝐇𝐢𝐬 𝐫𝐞𝐢𝐠𝐧
𝐁𝐮𝐭 𝐝𝐞𝐟𝐢𝐧𝐢𝐭𝐞𝐥𝐲 𝐧𝐨𝐭 𝐡𝐢𝐬 𝐛𝐥𝐨𝐨𝐝.
#NTR31@tarak9999 @prashanth_neel @MythriOfficial @NTRArtsOfficial pic.twitter.com/6rNTwE7hQt
">𝑻𝒉𝒆 𝒐𝒏𝒍𝒚 𝒔𝒐𝒊𝒍 𝒕𝒉𝒂𝒕 𝒊𝒔 𝒘𝒐𝒓𝒕𝒉 𝒓𝒆𝒎𝒆𝒎𝒃𝒆𝒓𝒊𝒏𝒈 𝒊𝒔 𝒕𝒉𝒆 𝒐𝒏𝒆 𝒔𝒐𝒂𝒌𝒆𝒅 𝒊𝒏 𝒃𝒍𝒐𝒐𝒅!
— Done Channel (@DoneChannel1) May 20, 2022
𝐇𝐢𝐬 𝐬𝐨𝐢𝐥,𝐇𝐢𝐬 𝐫𝐞𝐢𝐠𝐧
𝐁𝐮𝐭 𝐝𝐞𝐟𝐢𝐧𝐢𝐭𝐞𝐥𝐲 𝐧𝐨𝐭 𝐡𝐢𝐬 𝐛𝐥𝐨𝐨𝐝.
#NTR31@tarak9999 @prashanth_neel @MythriOfficial @NTRArtsOfficial pic.twitter.com/6rNTwE7hQt𝑻𝒉𝒆 𝒐𝒏𝒍𝒚 𝒔𝒐𝒊𝒍 𝒕𝒉𝒂𝒕 𝒊𝒔 𝒘𝒐𝒓𝒕𝒉 𝒓𝒆𝒎𝒆𝒎𝒃𝒆𝒓𝒊𝒏𝒈 𝒊𝒔 𝒕𝒉𝒆 𝒐𝒏𝒆 𝒔𝒐𝒂𝒌𝒆𝒅 𝒊𝒏 𝒃𝒍𝒐𝒐𝒅!
— Done Channel (@DoneChannel1) May 20, 2022
𝐇𝐢𝐬 𝐬𝐨𝐢𝐥,𝐇𝐢𝐬 𝐫𝐞𝐢𝐠𝐧
𝐁𝐮𝐭 𝐝𝐞𝐟𝐢𝐧𝐢𝐭𝐞𝐥𝐲 𝐧𝐨𝐭 𝐡𝐢𝐬 𝐛𝐥𝐨𝐨𝐝.
#NTR31@tarak9999 @prashanth_neel @MythriOfficial @NTRArtsOfficial pic.twitter.com/6rNTwE7hQt
இந்த படத்தை ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரசாந்த் நீல் இருவரின் Mythri Movie Makers & NTR Arts தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளில் அடுதடுத்து அப்டேட்கள் வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.
இதையும் படிங்க: கேன்ஸ் படவிழாவில் பா.இரஞ்சித்தின் வேட்டுவம்..!