ETV Bharat / entertainment

ராகவா லாரன்ஸ் & வடிவேலு நடிக்கும் சந்திரமுகி - 2..! - சந்திரமுகி 2

ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, 'வைகைப் புயல்' வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ராகவா லாரன்ஸ் & வடிவேலு நடிக்கும் சந்திரமுகி - 2..!

author img

By

Published : Jun 14, 2022, 10:24 PM IST

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் 'சந்திரமுகி 2' எனும் புதிய பிரமாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி.வாசு இயக்குகிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்புப் பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார்.

'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். 'ஹாரர் திரில்லர்' ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' படத்தின் மாபெரும் வசூல் சாதனையைத் தொடர்ந்து, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'பொன்னியின் செல்வன் - 1' படத்திற்கு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ராகவா லாரன்ஸ் & வடிவேலு நடிக்கும் சந்திரமுகி - 2..!
ராகவா லாரன்ஸ் & வடிவேலு நடிக்கும் சந்திரமுகி - 2..!

இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றியைப் பெற்ற 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரிப்பதால், 'சந்திரமுகி 2' படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகும் போதே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதையும் படிங்க: வெங்கட் பிரபுவுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.