ETV Bharat / entertainment

பாகுபாடு பார்க்கிறாரா ஏ.ஆர்.ரகுமான்? - சர்ச்சையான இன்ஸ்டா பதிவு! - cinema news

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இயக்குநர் ஐஷ்வர்யாவை பெண் இயக்குநர் என பதிவிட்டுள்ளது நெட்டிசன்கள் இடையே விவாதப் பொருளாகியுள்ளது.

சர்ச்சையான இன்ஸ்டா பதிவு
சர்ச்சையான இன்ஸ்டா பதிவு
author img

By

Published : Nov 25, 2022, 5:50 PM IST

இந்திய சினிமாவின் பெருமை என போற்றப்படுபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தற்போது ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படம் 'லால் சலாம்' படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் அமர்ந்து ஆர்மோனியம் வாசிக்கிறார். ”Jamming with the most promising Female director" எனும் தலைப்பிட்டு இயக்குநர் ஐஷ்வர்யாவை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ’ஏஆர் ரகுமான் இப்படி செய்யலாமா’ என்று தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். பெண் இயக்குநர் என்று ஏன் கூற வேண்டும் இயக்குநர் என்றே சொல்லலாமே, ஏன் அவர் பாகுபாடு பார்க்கிறாரா என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் சுதா கொங்கரா ஒருமுறை அவரை பெண் இயக்குநர் என்று அழைத்தபோது, அது ஏன் ஆண் இயக்குநர், பெண் இயக்குநர் என்று பிரித்து பார்க்கிறீர்கள் என்று கோபமடைந்தார். தற்போது ஏ.ஆர. ரகுமான் இப்படி சொல்லியிருப்பது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியானது காந்தாரா - சர்ச்சை பாடலை நீக்கிய அமேசான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.