சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1987ஆம் ஆண்டு வெளியான படம் "நாயகன்". பொதுவாகவே நடிகர் கமல்ஹாசனின் நடிப்பு அவரது படங்களில் அனைவராலும் பாராட்டும் படி இருக்கும். அந்த வகையில் நாயகன் திரைப்படம் கமல்ஹாசனுக்கு தனி அடையாளத்தை பெற்றுதந்துள்ளன.
இயக்குநர் மணிரத்னத்தின் திரைக்கதை, பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு ஆகியவற்றோடு இசைஞானி இளையராஜாவின் இசை என இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன. 1980களில் வெளியான இப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இப்படம் 70களில் ஆங்கிலத்தில் வெளியான தீ காட் ஃபாதர் (The God Father) படத்தின் தாக்கத்தில் இருந்து உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டன.
அண்மைக் காலமாக பல திரைப்படங்கள் மறு வெளியீடு நடைபெற்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் உலக நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன் நடித்த நாயகன் படம், அவரது பிறந்தநாளையொட்டி நவம்பர் 3ஆம் தேதி மறு வெளியீடு ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், கமல்ஹாசனின் 234வது படத்தை, நாயகன் படத்தை இயக்கிய இயக்குநர் மணிரத்னம் இயக்க உள்ளார். 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் கமல்ஹாசன் இணைவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இந்நிலையில், தற்போது நாயகன் படத்தின் மறு வெளியீடு குறித்த தகவல் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
இப்படத்தின், படத்தொகுப்பாளர் அண்மையில் சிறந்த ஆவணப்படத்திற்காக தேசிய விருது பெற்ற பி.லெனின் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, நாயகன் படத்தின் மறு வெளியீடு குறித்த பதிவுகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றன.
இதையும் படிங்க: Chittha Movie : சித்தார்த்தின் 'சித்தா' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு!