ETV Bharat / entertainment

நாகசைதன்யா - வெங்கட் பிரபு இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடக்கம்! - நாகசைத்தன்யா

நடிகர் நாக சைதன்யா இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு நாளை(செப்.21) முதல் ஹைதராபாத்தில் தொடங்கவிருப்பதாக அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகசைதன்யா - வெங்கட்பிரபு இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

author img

By

Published : Sep 20, 2022, 5:22 PM IST

இயக்குநர் வெங்கட்பிரபு - நடிகர் நாகசைதன்யா இருவரும் புதிய படத்திற்காக இணைய இருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்து இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

'NC22' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப்படம் நடிகர் நாக சைதன்யாவின் முதல் தமிழ் - தெலுங்கு பைலிங்குவல். அதேபோல, இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் தெலுங்கில் இயக்குநராக இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் படத்தின் பூஜையின்போது படத்தின் கதாநாயகி மற்றும் இசையமைப்பாளர் யார் என்பதும் தெரிவிக்கப்பட்டது. தற்போது இளைஞர்களுக்குப் பிடித்த கதாநாயகியாக வலம் வரக்கூடிய கீர்த்தி ஷெட்டி, இந்தப் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

'மாஸ்ட்ரோ' இசைஞானி இளையராஜா மற்றும் 'லிட்டில் மாஸ்ட்ரோ' யுவன் ஷங்கர் ராஜா இருவரும் முதல் முறையாக இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைக்கின்றனர்.

இப்படி பல எதிர்பார்ப்புகளுக்கு இடையில் படத்தின் முக்கிய அப்டேட்டாக நாளையில் இருந்து படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்குகிறது என படக்குழு அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து படக்குழு தெரிவித்திருப்பதாவது, "அக்கினேனி நாகேஸ்வர ராவ் அவர்களின் ஆசியுடன் எங்களின் முக்கிய படைப்பான நடிகர் நாக சைதன்யா - இயக்குநர் வெங்கட் பிரபு இணையும் படத்தின் படப்பிடிப்பு நாளையில் இருந்து தொடங்குகிறது என தெரிவித்துக்கொள்கிறோம்" என படத்தின் புதிய போஸ்டருடன் இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து இருக்கிறார்கள்.

இந்தப் போஸ்டரில் நாக சைதன்யாவின் படம் தொடர்பான எந்தவொரு லுக்கும் வெளியாகவில்லை. நாக சைதன்யா நின்று கொண்டிருக்கும்படி அவரது நிழல் உருவம் இருக்க, அவரை நோக்கி பல ரெட் டார்கெட்டுகள் இருக்கும்படி கறுப்பு- சிவப்பு வண்ணத்தில் வைப்ரண்ட்டாக இந்தப் போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’ ’மேனன்’ நீங்க படிச்சு வாங்குன பட்டமா...?’ - கௌதம் மேனனைத் தாக்கும் புளூசட்டை மாறன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.