சென்னை: நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் தனுஷ் - செல்வராகவன் இணைந்துள்ள படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். இந்த படத்தில் எல்லி அவரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கும் நிலையில், அரவிந்த் கிருஷ்ணா படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். கலைப்புலி எஸ் தாணு படத்தை தயாரித்துள்ளார். புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் தனுஷ் -செல்வராகவன் கூட்டணி சிறப்பாக அமைந்த நிலையில் தற்போது நானே வருவேன் படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது சமூக வலைதளப்பக்கத்தில் “எண்ணியது எண்ணியபடி, சொன்னது சொல்லியபடி” என பதிவிட்டு செப்டம்பர் மாதம் வெளியீடு என அறிவித்திருந்தார். அதன்படி இம்மாதம் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: திடீரென வெளியான 'வாத்தி' படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்!