பாலிவுட்டின் பிரபல ஜோடிகளான ராம்கோபால் வர்மா மற்றும் இஷா கோபிகர் மீண்டும் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு, MX அசல் தொடரான “தகனம்” தொடரில் இணைந்துள்ளனர். ட்ரெய்லரின் வழியே அனைவரது கவனத்தையும் ஈர்த்த இந்தத் தொடர், தற்போது ரசிகர்களிடம் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள தொடர்களில் ஒன்றாகும்.
இந்த MX ஒரிஜினல் தொடரில் இஷா கோபிகர், நைனா கங்குலி, அபிஷேக் துஹான், அபிலாஷ் சவுத்ரி, சாயாஜி ஷிண்டே, அஷ்வத்காந்த் சர்மா, பார்வதி அருண் மற்றும் பிரதீப் ராவத் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். மிகச்சிறப்பான நிஜ வாழ்க்கை சித்தரிப்புகள் மற்றும் வலுவான அழுத்தமான உள்ளடக்கத்திற்காக அனைவராலும் விரும்பப்படும் இயக்குநர், ராம்கோபால் வர்மா. பார்வையாளர்களை எப்போதும் இருக்கைகளின் நுனியில் வைத்திருக்கும் பரபர விறுவிறு கதைகளைத் தருவதில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். பல திரைப்படங்களில் ஒன்றாகப் பணியாற்றிய வர்மாவும் இஷா கோபிகரும் மீண்டும் இணைந்து, பணியாற்றுவதன் மூலம் ‘தகனம்’ தொடருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளனர்.
பல்வேறு திறமைகள் வாய்ந்த நடிகர் குழு: இஷா கோபிகர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு காவலர் வேடத்தில் இந்தத் தொடரில் அவதாரம் எடுத்துள்ளார். அவரது கதாபாத்திரமான அஞ்சனா சின்ஹா, கடினமாக உழைத்து, க்ரைம் அதிகமாக இருக்கும் நகரில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, அமைதியைக் கொண்டுவருகிறார். மேலும் அவர் இத்தொடரின் சூத்திரதாரராகவும் இருக்கிறார்.
பவானி வேடத்தில் நடிக்கும் நடிகை நைனா கங்குலி, பெங்காலி மற்றும் தென்னிந்திய படங்களில் பணிபுரிந்துள்ளார். இவர் ’தகனம்’ தொடரில் பழிவாங்கும் நக்சலைட் வேடத்தில், பன்முகத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். திறமையின் வடிவமாக விளங்கும் நடிகர் அபிஷேக் துஹான், தகனத்தில் ‘ஹரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவர் நிச்சயமாக தனது திறமைமிகு நடிப்பால் பார்வையாளர்களால் கவனிக்கப்படுவார். தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகர் அபிலாஷ் சவுத்ரி, அவரது நிஜ வாழ்க்கை ஆளுமைக்கு முற்றிலும் எதிரான ஒரு அதிரடியான நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே, தகனம் தொடரில் ’சென்னா ரெட்டி’-யாக நடித்துள்ளார்.
இது வெறும் பழிவாங்கும் கதை அல்ல..!: மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள இந்தத் தொடரைப் பற்றி தயாரிப்பாளர் ராம்கோபால் வர்மா பேசுகையில்…, “எனது முதல் OTT தொடரான “தகனம்” தொடரை MX Player, உடன் இணைந்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மகாத்மா காந்தி சொன்ன ‘கண்ணுக்குக் கண் உலகையே குருடாக்குவதில்தான் வெற்றியடையும்’, மகாபாரதத்தில் மேற்கோள் காட்டப்பட்ட ‘பழிவாங்குதல் என்பது தூய்மையான உணர்ச்சி’ என்ற இரு முரண்பாடான மேற்கோள்களுக்கு இடையில் உணர்வுப்பூர்வமான சம்பவங்களுடன் உருவாகியுள்ளது தான், இந்தக் கதை.
தகனம் வெறும் பழிவாங்கும் கதையல்ல, பழிவாங்கும் உணர்வின் கதையைச் சொல்கிறது. இது ஒரு க்ரைம் த்ரில்லர் அல்ல, ஆனால் இது உங்களை உறைய வைக்கும். உணர்வுப்பூர்வமாக சிலிர்க்க வைக்கும், குற்றங்களைப் பற்றியது. இந்தத் தொடருக்காக, கதையின் வன்முறைகளை நிகழ்த்திக்காட்டும் இத்தொடரின் கதைக்கு நியாயம் செய்யும், தீவிரமான மெத்தட் ஆக்டிங் நடிகர்களை தேடித்தேடி தேர்ந்தெடுத்துள்ளோம். இந்தத் தொடருக்கு பார்வையாளர்கள் தரும் வரவேற்பைக் காண எங்கள் குழு முழுவதும் ஆவலுடன் காத்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பரியேறும் பெருமாள் தந்தையை பரியேற்றிய மாவட்ட ஆட்சியர்