சென்னை: நடிகர் விஜய் நடிப்பில், வம்சி பைடிபைலி இயக்கத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று (ஜனவரி 11) வாரிசு திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ, இயக்குநர் வம்சி, இசையமைப்பாளர் தமன், நடிகர் ஷாம் ஆகியோர் சென்னை ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்தனர்.
படத்திற்கு ரசிகர்கள் தந்த ஆதரவைக் கண்ட இசையமைப்பாளர் தமன் அங்கேயே கண் கலங்கினார். தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குநர் வம்சி தமனை ஆரத்தழுவி அவரை பாராட்டினர். நடிகர் ஷாம் கேலரியில் இருந்து தளபதி என்று கோஷமிட ரசிகர்களும் ஆரவாரமிட்டனர். இந்த காணொலியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வீடியோ: மண்டியிட்டபடி வாரிசு படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்கள்