ETV Bharat / entertainment

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் இணைந்துள்ள ’காதலிக்க நேரமில்லை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! - இயக்குநர் ஸ்ரீதர்

ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

காதலிக்க நேரமில்லை
காதலிக்க நேரமில்லை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 9:59 PM IST

சென்னை: ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான இறைவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.‌ ஜெயம் ரவி தற்போது ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன், ஜீனி, ராஜேஷ் இயக்கத்தில் பிரதமர் என‌ பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். சைரன் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்று தகவல் வெளியானது. தற்போது இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்திற்கு ’காதலிக்க நேரமில்லை’ என்ற தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.

இந்த தலைப்பு பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த கிளாசிக் திரைப்படத்தின் தலைப்பு ஆகும். இப்படத்தில் நித்யா மேனன் - ஜெயம் ரவி ஜோடியாக நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார்.‌

மேலும் இப்படத்தில் யோகி பாபு, வினய், லால், ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.‌ இப்படத்தின் முதல் பார்வை (first look) இன்று (நவ. 29) வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் இருவரும் மிகவும் நெருக்கமாக இருப்பது போன்ற போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவி நடிக்கும் காதல் படம், மற்றும் ஏ.ஆர் ரகுமான் இசை என்பதாலும் இப்போதே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கிருத்திகா உதயநிதி ஏற்கனவே வணக்கம் சென்னை, காளி என இரண்டு படங்களையும், காளிதாஸ் ஜெயராம் நடித்த பேப்பர் ராக்கெட் என்ற இணைய தொடரையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சமூகவலைதளத்தை தெறிக்கவிடும் ஐஸ்வர்யா ராஜேஷின் ரீசன்ட் எலெகன்ஸ் லுக்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.