ETV Bharat / entertainment

’நான் தற்கொலை செய்துகொள்ள கூட நினைத்தேன்..!’ - மிதுன் சக்கரவர்த்தி - மிதுன் சக்கரவர்த்தி

தற்கொலை செய்து கொள்ளக்கூட நினைத்ததாக நடிகர் மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

’நான் தற்கொலை செய்துகொள்ள கூட எண்ணிருக்கிறேன்..!’ - மிதுன் சக்கரபோர்த்தி

author img

By

Published : Jul 24, 2022, 7:03 PM IST

ஹைதராபாத்: பழம்பெரும் நடிகரான மிதுன் சக்கரவர்த்தி பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகங்களில் தனக்கென தனிப்பெயர் பெற்றவர். 80களின் காலகட்டங்களில் மிகப் பிரபலமான நடிகராகத் திகழ்ந்தவர். ஆனால் இத்தகைய புகழுக்கு வரும் முன்னால் மிதுனை நிராகரிப்புகளும் போராட்டங்களும் சமமாக தாக்கின.

இதனால் அவருக்கு தற்கொலை எண்ணங்கள் கூட வந்திருக்கிறதாம், இருப்பினும் அதை தாண்டிய ஓர் ‘ஃபைட்டர்’ போல் இருந்து வருகிறார் மிதுன். 1979ஆம் ஆண்டு வெளியான சுரக்‌ஷா என்கிற திரைப்படத்தின் மூலம் நட்சத்திரமான மிதுன், ஹிந்தி சினிமாவின் ’டான்சிங் ஸ்டார்’ ஆனார்.

‘டிஸ்கோ டான்சர்’ , ’சஹ்ஹாஷ்’, ‘வர்தாட்’ , ‘வாண்டெட்’, ‘பாக்சர்’, ‘பியார் ஜுக்தா நஹின்’, ‘பியாரி பெஹ்னா’ , ’அவினாஷ்’, ‘டான்ஸ் டான்ஸ்’, ‘பிரேம் பிரடிக்யா’, ‘முஜ்ரிம்’, ‘அக்னிபாத்’, ‘யுகந்தர்’, ‘தி டான்’, ‘ஜல்லாத்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும், ‘மிரிகயா(1976)’, ‘தஹதர் கதா(1992)’, ‘சுவாமி விவேகாநந்தா(1998)’ போன்ற படங்களில் நடித்தமைக்காக தேசிய விருதுகளும் பெற்றுள்ளார். இத்தகைய சாதனை படைத்த இவருக்கு திரையுலகிற்குள் நுழையும் முன் நிறைய கஷ்டங்களும், வெற்றி குறித்த கேள்விகளும் இருந்துள்ளன. தான் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று கூட யோசித்தது உண்டு என அவர் கூறியுள்ளார்.

மேலும், “எல்லோரும் கஷ்டப்பட்டு தான் வெற்றியடைவார்கள் ஆனால் என்னுடையது மிகவும் கஷ்டமானது. நான் தற்கொலை செய்யக் கூட எண்ணிருக்கிறேன். என்னால் என் தாயகமான கொல்கத்தாவிற்கு கூட திரும்ப முடியாத நிலை இருந்தது. ஆனால் யாரும் தங்கள் வாழ்வில் போராடாமல் வாழ்வை முடித்துக் கொள்ள நினைக்கக் கூடாது என்பது தான் என் அறிவுரை. நான் பிறப்பிலே ஓர் போராளி, எனக்கு தோற்றுப் போகத் தெரியாது. ஆகையால் தான் நான் இங்கு உள்ளேன்” என்றார்.

‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் ஓர் முக்கிய வேடத்தில் மிதுன் நடித்திருந்தார். அடுத்தபடியாக பெங்காலி திரைப்படமான ’புரொஜோபொட்டி’ மற்றும் ஹிந்தி திரைப்படமான ’பாப்’ ஆகிய திரைப்படங்களில் இடம்பெறவுள்ளார்.

இதையும் படிங்க: வெளியானது ’பிளாக் பாந்தர் : வக்கண்டா ஃபாரவர்’ டீசர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.