மலையாளம், தமிழ் படங்களில் பணியாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர் நாகேந்திரன் என்பவர் முதல்முறையாக இயக்கும் படம் ‘மிளிர்’. இப்படத்தில் "பிக்பாஸ்" புகழ் ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சினிமா டூர் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எஸ். சூர்யாதேவி தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகனாக இந்தோனேசியாவைச் சேர்ந்த தமிழர் சரண் விசாகன் அறிமுகமாகிறார். வில்லனாக இயக்குநரும் நடிகருமான ஏ. வெங்கடேஷ் நடிக்கிறார்.
கதாநாயகியை மையப்படுத்திய ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சமீபத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் ‘மிளிர்’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இந்த மோஷன் போஸ்டரை மலையாள இயக்குநர்கள் ஜோஜூ மற்றும் பிரஜேஷ் சென் ஆகியோர் வெளியிட்டனர். இந்த மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் சரண் விசாகன், டிஎஸ்கே, பரத், யோகி ராம், ஸ்வாதி, இளங்கோசுரேஷ், ராய் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் கார்த்திகேயன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், தினேஷ் ஆண்டனி இசை அமைக்கிறார், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பினை மேற்கொள்கிறார் மற்றும் வீரமணி கணேசன் கலை இயக்கத்தை கவனித்துகொள்கிறார்.
இதையும் படிங்க: நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் 'அம்மு' திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு