ETV Bharat / entertainment

நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனை எதிர்த்து நான் போட்டியிடுவேன்.. நடிகர் மன்சூர் அலிகான் சவால்!

நாடாளுமன்ற தேர்தலில் தேனியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 11:49 AM IST

Updated : Jan 10, 2024, 1:13 PM IST

சென்னை: இது தொடர்பாக, நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1999-இல் புதிய தமிழகம் சார்பில், கட்டைவண்டி சின்னத்தில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் பெற்றேன். அப்போது முதன்முதலில் தேர்தலில் களம் இறங்கிய டிடிவி தினகரன், ஜெயலலிதா பெயரால் வெற்றி பெற்றார். ஆனால் அந்த தாயை எப்படி ஒழித்தார்கள், எவ்வளவு கொடூரம் செய்தார்கள் என்று நாடறியும்.

நான் ஜெயலலிதா மரணத்தை விசாரித்து வழக்கு போட்டு எல்லா ஆவணங்களும் வைத்திருக்கிறேன். அவர்களது குடும்பத்தினர் எத்தனை லட்சம் கோடி அடித்து உலையில் போட்டார்கள். எப்படி அம்மாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு, அவரிடம் நயவஞ்சகம் செய்து, மக்களுக்கு, தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்தார்கள்.

ஆலமரமான, அன்பின் ஆண்டாளான, அம்மாவை வேரடி மண்ணோடு நாடகமாடி, ஆளுநர் உட்பட யாரையும் பார்க்கவிடாது மாய்த்த கொடூரத்தை எடுத்து சொல்ல, மக்களோடு மக்களாக நின்று 1999இல், நான் தோற்ற அதே பெரியகுளம், தேனி மண்ணில் நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன், இது சத்தியம்.

எந்த கட்சியுடன் கூட்டணி வைத்து வந்தாலும் சரி, இந்தா வர்ரேன்டா" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகை த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் டிடிவி தினகரன் பற்றி அரசியல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிக்ஸு சிக்ஸு.. கிரிக்கெட் களத்தில் அலப்பறை செய்யும் விஜய்.. வைரலாகும் வீடியோ!

Last Updated : Jan 10, 2024, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.