சென்னை: நடிகை மஞ்சுவாரியர் மலையாள சினிமாவில் முக்கிய நடிகையாக அறியப்படுகிறார். மலையாளத்தில் நடித்து வந்த அவர் பின்னர், திருமணம் செய்துகொண்டு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். கணவரை விவாகரத்து செய்த பிறகு, சிறிது காலம் ஓய்வில் இருந்தவர் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்த அசுரன் படத்தில் நடித்தார். அதில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே மிகவும் பேசப்பட்டது. அதனைத்தொடர்ந்து சமீபத்தில் அஜித் நடித்துள்ள 'துணிவு' படத்தில் நடித்தார். இப்படத்திலும் இவரது நடிப்பு பேசப்பட்டது.
இந்த நிலையில் இவர் கேரளா அருகே கொச்சிப் பகுதியில் உள்ள காக்காநாடு பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ-விடம் பைக் ஓட்டிக்காட்டி லைசென்ஸ் பெற்றுள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ஆனால், இதுவே அவருக்கு தற்போது புதிய பிரச்னையை உருவாக்கியுள்ளது.
'துணிவு' படப்பிடிப்பு சமயத்தில் அஜித் இமயமலையில் பைக் ரைடு சென்ற போது, கூடவே மஞ்சு வாரியரும் பைக் ரைடு சென்றதாக புகைப்படங்கள் வெளியிட்டார். ஆனால், இப்போது தான் தான் லைசென்ஸ் வாங்கும் மஞ்சு வாரியர் எப்படி அப்போது பைக் ஓட்டினார் என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். அவர் பைக் ஓட்டாத பட்சத்தில் பிரச்னை இல்லை. இதனால் மஞ்சுவாரியர் புதிய சிக்கலில் மாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் விளக்கம் தரும் பட்சத்தில் இப்பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
இதையும் படிங்க:ஜீ5 ஓடிடி தளத்தின் புதிய தொடர் 'அயலி'