ETV Bharat / entertainment

'மஞ்சள் குடை' - விமலின் புதிய படம் அறிவிப்பு - Vimal new movie announcement

கணேஷ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விமல் நாயகனாக நடிக்கும் 'மஞ்சள் குடை' படத்தின் இறுதிகட்டப்பணிகள் நடைபெற்றுவருகிறது என படத்தின் இயக்குநர் சிவம் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

'மஞ்சள் குடை' - விமலின் புதிய படம் அறிவிப்பு

author img

By

Published : Jun 13, 2022, 10:40 PM IST

சென்னை: கணேஷ் என்டர்டெயின்மென்ட் T.R. ரமேஷ், நாஹர் பிலிம்ஸ் ஜாகீர் உசேன் இருவரும் இணைந்து, எஸ்ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள " கடமையை செய்" படத்தை தயாரித்துள்ளனர். படம் இம்மாதம் 24-ம் தேதி வெளியாக உள்ளது.

இதைத்தொடர்ந்து T.R.ரமேஷ், ஜாகீர் உசேன் ஆகியோர் விமல் நாயகனாக நடிக்கும் 'மஞ்சள் குடை' படத்தையும் தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக வால்டர் படத்தில் நடித்த ஷெரின் கஞ்ச்வாலா நடித்துள்ளார்.

இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், ரேணுகா ராதாரவி ,Y.G. மகேந்திரன், ’விஜய் டிவி’ ராமர், மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை சிவம் ராஜாமணி என்பவர் எழுதி இயக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக பிரவீன் குமார், மற்றும் இசையமைப்பாளராக ஹரி பணியாற்றுகின்றனர்.

படம் பற்றி இயக்குநர் சிவம் ராஜாமணி கூறும்பொழுது, ‘ஃபேமிலி சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் கலந்த கதை இது. இன்றைய சூழலில் மிடில் கிளாஸ் மக்களின் பெரிய போராட்டமே வீட்டு வாடகை தான். அப்படி மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் நாயகன் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஒரு வீடு வாங்க நினைக்கிறார்.

அதற்கு எப்படிப் பணம் சேர்க்கிறார்கள். புது வீடு வாங்குவதற்கு அவர்கள் படும் போராட்டங்கள், இறுதியில் வீடு வாங்கினார்களா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'யானை' ரிலீஸ் தேதி மாற்றத்துக்கு இப்படி ஒரு காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.