ETV Bharat / entertainment

இனி விமானத்தில் “தைய தைய”.. ஷாருக்கான் - மணிரத்னம் சுவாரஸ்ய உரையாடல்! - பாலிவுட் சூப்பர் ஸ்டார்

Indian of the Year 2023: மும்பையில் நடைபெற்ற "இந்தியன் ஆஃப் தி இயர் 2023" விருது வழங்கும் விழாவில் ஷாருக்கான் மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் மேடையில் மாறி மாறி கலாய்த்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Indian of the Year 2023
பிளைட் வாங்கி வாருங்கள் சீக்கிரம் இணையலாம்
author img

By PTI

Published : Jan 11, 2024, 12:26 PM IST

மும்பை: சமீபத்தில் மும்பையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் "இந்தியன் ஆஃப் தி இயர் 2023" என்ற விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் மணிரத்னம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், இந்த மூவருக்குமே இந்தியன் ஆஃப் தி இயர் 2023 என்ற விருது வழங்கப்பட்டது.

அப்போது விருது வழங்கும் விழாவின் மேடையில் நடந்த மணிரத்னம் மற்றும் ஷாருக்கானின் உரையாடல்கள் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர், ஷாருக்கானிடம் அடுத்ததாக இயக்குநர் மணிரத்னத்தோடு இணைந்து எப்போது படம் பண்ணப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும், மணிரத்னம் மேடையில் இருப்பதால் உடனடியாக கேட்டு விடுங்கள் என்று கூறினார்.

இதனை சுதாரித்துக் கொண்ட ஷாருக்கான், அடுத்து எப்போது படம் பண்ணலாம் மணிரத்னம் சார்? எனவும், உயிரே படத்தில் ‘தையா தையா’ பாடலில் ரயிலின் மீது டான்ஸ் ஆடினேன். தற்போது நீங்கள் சொன்னால் பிளைட் மேலே கூட டான்ஸ் ஆட தயார் என்றார். இதற்கு சிரித்துக் கொண்டே மணிரத்னம், சீக்கிரமே பிளைட் வாங்கி வாருங்கள், அதன்பின் இணையலாம் என்றார்.

உடனே ஷாருக்கான் இப்போது என் படம் எல்லாம் பாக்ஸ் ஆபிஸில் வேகமாகப் போகிறது. அதை வைத்து பிளைட் வாங்குவது பெரிய விஷயம் அல்ல என்று கலாய்த்தார். (கடந்த ஆண்டில் ஜவான், பதான், டங்கி போன்ற படங்கள் சேர்த்து ரூ.2,500 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.)

இதற்கு, இயக்குநர் மணிரத்னம், நான் சொந்தமாக பிளைட் வாங்கச் சொன்னேன். வாங்கி வாருங்கள் அப்போது இணையலாம் என்று சிரித்தபடி கூறினார். மேடையில் இருவரும் உரையாடிய வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க: தனக்கே உரிய பாணியில் செல்ஃபி! இணையத்தை வட்டமடிக்கும் விஜயின் வீடியோ..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.