ETV Bharat / entertainment

‘Kalki 2898 AD' படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாக வெளியிட்டால் நடவடிக்கை பாயும் - படக்குழு அறிவிப்பு!! - prabhas

நடிகர் பிரபாஸ், கமல்ஹாசன் நடித்து வரும் ‘Kalki 2898 AD' படத்தின் காட்சிகளை சட்ட விரோதமாக வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 7:01 PM IST

ஹைதராபாத்: மகாநதி படத்தை இயக்கி பெரும் புகழ்பெற்ற இயக்குநரான நாக் அஷ்வின், தற்போது நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ‘kalki 2898 AD' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது. வைஜெயந்தி மூவீஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

  • Legal Copyright Notice : #VyjayanthiMovies wishes to inform the public that #Kalki2898AD and all its components are protected by copyright laws. Sharing any part of the film, be it scenes, footage or images, is illegal and punishable. Legal action will be taken as needed, with… pic.twitter.com/wc3rRfRuDJ

    — Vyjayanthi Movies (@VyjayanthiFilms) September 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் இந்த படத்தில் தீபீகா படுகோன், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பசுபதி என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சட்ட விரோதமாக சமூக வலைத்தளத்தில் வெளியானது. இது படக்குழுவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து வைஜெயந்தி மூவீஸ் தயாரிப்பு நிறுவனம், ‘Kalki 2898 AD' படத்தின் காப்புரிமை பாதுகாப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், ‘kalki 2898 AD' படத்தின் காட்சிகளை சட்ட விரோதமாக வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

‘kalki 2898 AD' குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “Kalki 2898 AD படம் தொடர்பான காட்சிகள், இசை, வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தும் வைஜெயந்தி மூவீஸ் தயாரிப்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்த படம் சம்பந்தப்பட்ட காட்சிகளை சட்ட விரோதமான முறையில் வெளியிடுவோர் மீது காப்புரிமைச் சட்டம் 1957படி நடவடிக்கை பாயும்” என கூறப்பட்டுள்ளது.

Also read: Is Dulquer Salmaan the next addition to Prabhas' Kalki 2898 AD? The actor says 'I went to the sets and...'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.