ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, தனது மனைவியுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸை அமெரிக்காவில் சந்தித்தார். மேலும், அந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்தப் பதிவில், “ பில் கேட்ஸ் அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
இந்த உலகம் கண்ட மிகச் சிறந்த தொலைநோக்குப் பார்வையாளர், இருப்பினும் மிகுந்த தன்னடக்கத்துடன் இருக்கிறார்” என்ற வாசகத்துடன் பதிவிட்டனர். தற்போது நடிகர் மகேஷ்பாபு தன்னுடைய விடுமுறை நாட்களை அமெரிக்காவில் களித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது விடுமுறை நாட்களில் எடுத்து வரும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு இவர் நடித்து வெளியான ‘சர்காரு வாரி பாட்டா’ படம் சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து, அடுத்த படியாக இயக்குநர் ராஜமௌலியுடன் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.