ETV Bharat / entertainment

கோவா சர்வதேச திரைப்பட விழா 2023; சிறப்பு விருது பெற்ற மாதுரி தீட்சித்! - நீல நிற சூரியன்

54th IFFI 2023 opening ceremony: கோவாவில் நடைபெறும் 54வது சர்வதேச திரைப்பட விழாவின் துவக்க நிகழ்ச்சியில், பிரபல பாலிவுட் நடிகர்கள் மாதுரி தீட்சித் மற்றும் சாகித் கபூர் ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகை மாதுரி தீட்சித்துக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.

கோவா சர்வதேச திரைப்பட விழா துவக்க விழா
கோவா சர்வதேச திரைப்பட விழா துவக்க விழா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 11:52 AM IST

கோவா: 54வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) நேற்று (நவ.21) கோவாவில் துவங்கியது. அதன் துவக்க விழா நிகழ்ச்சியாக, பிரபல பாலிவுட் நடிகர்கள் மாதுரி தீட்சித் (Madhuri Dixit) மற்றும் சாகித் கபூர் (Shahid Kapoor) ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, நடிகை மாதுரி தீட்சித்துக்கு, தனது திரைத்துறை பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

அதனை அடுத்து, மாதுரி மேடையில் பேசுகையில், “இந்த விருது பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதைப் போன்று விருதளித்து கவரவிக்கப்படுவது, மேலும் சிறப்பாக நடிக்க ஊக்கம் அளிக்கிறது. மேலும், மாதுரி தீட்சித் தனது நடன நிகழ்வின்போது, டோலா ரே டோலா (Dola Re Dola), ஓ ரே பியா (O Re Piya), (கர் மோரே பர்தேசியா) Ghar More Pardesiya போன்ற அவரது நடனத்தில் ஹிட்டான பாடல்களுக்கு நடனமாடினார்.

விழா மேடையில் அவரது நடனம் அனைவரையும் கவரும் வைகையில் இருந்ததாகவும், அதேபோல் நடிகர் சாகித் கபூரின் நடனமும் பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கும் விதத்தில் இருந்ததாகவும் விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, சாகித் கபூர் கபீர் சிங் (Kabir Singh) படத்தின் இசைக்கு பைக்கில் என்ட்ரி கொடுத்தது அரங்கில் கைதட்டல்களை ஒலிக்கச் செய்தது.

இதையும் படிங்க: "சந்தானத்திற்கு ரூ.3 கோடி அல்ல ரூ.30 கோடி கொடுக்க தயார்"- ஞானவேல்ராஜா!

அதனைத் தொடர்ந்து, கோவாவில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழாவில், கடக் சிங் (Kadak Singh) படத்தின் டிரெய்லர் மற்றும் சாரா அலி கான் (Sara Ali Khan) நடிக்கும் ஏ வதன் மேரே வதன் (Ae Watan Mere Waten) திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

  • The ambiance of the 54th #IFFI became truly electrifying as luminaries from both the national and international film fraternity graced the red carpet at the International Film Festival of India✨🎞️

    🎦 Watch your favorite film actors in highlights from the #RedCarpet of #IFFI54pic.twitter.com/czBbXZ9sVk

    — PIB India (@PIB_India) November 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், இந்த சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க விழாவில் ஸ்ரேயா கோசல், விஜய் சேதுபதி, ஷ்ரேயா சரன், நுஸ்ரத் பருச்சா, சன்னி தியோல், கரன் ஜோஹர், சுக்விந்தர் சிங் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர். மேலும் இத்திரைப்பட விழாவில், விடுதலை பாகம் 1, பொன்னியின் செல்வன் பாகம் 2, நீல நிற சூரியன், காதல் என்பது பொதுவுடைமை ஆகிய படங்களும், பிரவீன் செல்வம் இயக்கிய 'நன்செய் நிலம்' எனும் ஆவணப்படமும் திரையிடப்பட்ட உள்ளன.

இதையும் படிங்க: மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு - த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்பட திரைப்பிரபலங்கள் கடும் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.