இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி மாதவன் எடுத்திருக்கும் படம் 'ராக்கெட்ரி'. இதில் மாதவனின் மனைவியாக சிம்ரன் நடித்துள்ளார். இவர்களுடன் ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று(ஜூன் 22) சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் மாதவன் கலந்து கொண்டார்.
அப்போது பேசும் போது, பஞ்சாங்கத்தை வைத்து இந்திய விஞ்ஞானிகள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செயற்கை கோள்களை அனுப்பியதாகவும், பலநூறு வருடங்களுக்கு முன்பே நம் முன்னோர்கள் கிரகத்தின் கோள்களை கணக்கு செய்து வைத்ததாகவும் கூறிய தகவல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
மேலும், ‘ராக்கெட்ரி’ என விண்கலத்தை மையமாகக் கொண்ட படத்தை எடுத்த மாதவனே இப்படி பேசிய கருத்து பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இவர் இயக்கியுள்ள ‘ராக்கெட்ரி’ திரைப்படம் வருகிற ஜூலை 1ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்டப் பல்வேறு மொழிகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நம்பி நாராயணனை பார்த்தபிறகு எனது வாழ்க்கையே மாறிவிட்டது - நடிகர் மாதவன்!