ETV Bharat / entertainment

முதல் படமே பிரமாண்டமாக வெளியாகிறது - மாஸ் காட்டும் 'லெஜண்ட்' அண்ணாச்சி! - லெஜெண்ட் திரைப்படம்

சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்' திரைப்படம் உலகெங்கும் 28 ஜூலை அன்று ஐந்து மொழிகளில் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது.

முதல் படமே பிரம்மாண்டமாக வெளியாகிறது - மாஸ் காட்டும் லெஜண்ட் அண்ணாச்சி

author img

By

Published : Jul 21, 2022, 6:22 PM IST

லெஜண்ட் சரவணன் முதல்முறையாக தயாரித்து, அதிரடி நாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' திரைப்படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர், 'மொசலோ மொசலு' பாடல், 'வாடிவாசல்' பாடல் ஆகியவை பல மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான 'பொ பொ பொ' பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் என அழுத்தமாக தடம் பதித்திருக்கிறார், லெஜண்ட் சரவணன். எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் மீண்டும் மீண்டும் படம் பார்க்கும் வகையில், சினிமா பாணியில் சொல்வதென்றால் ரிபீட் ஆடியன்ஸை வரவழைக்கும் ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக, பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூலை 28அன்று வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த பல வெற்றிப்படங்களை தமிழ்நாடு எங்கும் விநியோகம் செய்த கோபுரம் சினிமாஸின் ஜி.என். அன்புச்செழியன், 'தி லெஜண்ட்' படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்து "என் கணிப்பின் படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார்" என்று பாராட்டி, நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் எனக்கூறி, அதிக முன் பணம் கொடுத்து தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறார்.

மேலும், தமிழ்நாடு எங்கும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் 'தி லெஜண்ட்' திரைப்படத்தை அவர் வெளியிட உள்ளார். தமிழ்நாட்டைப்போல மற்ற மொழிகளிலும் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது என வெளிநாடு மற்றும் அனைத்து மொழிகளின் வெளியீட்டு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இதனால், முதல் படத்திலேயே அதிகப்பணம் கொடுத்து பெறப்பட்ட படம், மற்றும் உலகமெங்கும் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் படம் என்கிற பெருமை 'லெஜண்ட்' சரவணனுக்கு கிடைத்துள்ளது என்று திரைத்துறை மற்றும் திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: 'இரவின் நிழல்' ஒரு உலக சாதனை படம் - ரஜினிகாந்த் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.