ETV Bharat / entertainment

மாமன்னன் வசூல் எவ்வளவு? - வெற்றிவிழா மேடையில் போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்! - Maamannan box office

பல தடைகளைத் தாண்டி கடந்த 29ஆம் தேதி வெளியான 'மாமன்னன்' திரைப்படம் 9 ஆவது நாட்களில் ரூ.52 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 8, 2023, 10:20 PM IST

சென்னை: மாமன்னன் திரைப்படத்தின் வெற்றிவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், லால், விஜயகுமார், யுகபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது விழாவில் பேசிய கீர்த்தி சுரேஷ், 'இப்படி ஒரு வெற்றி மேடையில் நிற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இதுபோன்ற பெரிய படங்களில் பெண் நடிகைகளுக்கு நல்ல வேடம் கிடைப்பது கடினம் என்றும் கூறினர். இதற்கு வாய்ப்பளித்த இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி' என்றார்.

ரூ.52 கோடி வசூல்: தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், 'படத்தின் வெளியீட்டுக்கு முன்பே இந்த படத்துக்கு விளம்பரம் கொடுத்த உங்களுக்கு நன்றி என்று பேசத் தொடங்கினார். படம் இரண்டாவது வாரமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பதாகவும், மாமன்னன் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.52 கோடி வசூலித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவே தனது திரை வாழ்வில் மிகப்பெரிய வசூல் என்றும் ஒரு நல்ல படத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து விட்டீர்கள் என்றும் மகிழ்ச்சியடைந்தார். தன்னுடைய முதல் படமும் மற்றும் கடைசி படமும் வெற்றிப்படமாக அமைந்தது எனக்கு நல்லதொரு விழாவாக தன்னை வழியனுப்பி வைத்திருப்பதாகவும் கூறினார்.

அபாரமான வடிவேலுவின் நடிப்பு: இதுதான் என்னுடைய கடைசி சினிமா நிகழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், கண்டிப்பாக படத்தின் 50 வது நாள் விழா மேடையில் சந்திப்போம் என்றார். மேலும், இந்த படத்தின் போஸ்டர் வெளியிட்ட அன்றே படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே ஓடிடி தளத்தில் படத்தை விற்றுவிட்டோம் என்றார். இந்த படத்தில் உபயோகித்த அனைத்து பொருட்களும் உண்மையானவை எனக்கூறிய உதயநிதி ஸ்டாலின், வடிவேலுவின் நடிப்பு மிகவும் அருமையாக இருந்ததாக அவரை வெகுவாகப் பாராட்டினார். மலையில் நின்று அவர் அழும்போது யாரும் அழாமல் இருக்க முடியாது என்றும் அவர் இப்படத்தை பண்ணவில்லை என்றால் படமே பண்ண வேண்டாம் என்று சொல்லியதாக அவர் பெருமை கூறினார்.

கீர்த்தி சுரேஷ், இயக்குநர் மாரி செல்வராஜை கலாய்த்த உதயநிதி: முதலமைச்சர் கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்ற பயம் எனக்கு இருந்தது. நடிகர் லால் தான் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றவுடன் தான் எனக்கு சந்தோஷமாக இருந்தது. இந்த படத்தில் முதலமைச்சர் உபயோகித்த பிரச்சார வாகனம் எனது அப்பா மு.க.ஸ்டாலின் உபயோகித்த வண்டி, எதிர்கட்சி தலைவர் உபயோகித்த வாகனம் நான் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய வாகனம் என்றார்.

மேலும் பேசிய அவர், 'மாமன்னன் திரைப்படம் வெளியான 9 நாட்களில் மொத்தம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் மற்றும் ஓவர்சீஸ் என இதுவரை ரூ.52 கோடி வசூலித்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதுவரையில், தன்னுடைய படங்களில் இந்த மாமன்னன் படம் தான் அதிகப்படியான வசூலித்த படம் என்றும் தெலுங்கில் வரும் 14ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாகவும்' அவர் கூறியுள்ளார்.

பின்னர் பேசிய நடிகர் வடிவேலு, 'இந்த படத்தின் மாமன்னன் இயக்குநர் மாரி செல்வராஜ் தான் என்று அவருக்கு புகழாரம் சூடினார். ஒரு 30 படம் இயக்கிய இயக்குநரை போல் மாரி செல்வராஜ் உள்ளதாகவும், படப்பிடிப்பில் நடந்த நகைச்சுவை சம்பவத்தை மேடையில் பகிர்ந்து கொண்டார், நடிகர் வடிவேலு. படம்தான் சீரியசாக இருக்கும் ஆனால் படப்பிடிப்பு தளத்தில் எல்லோருமே கலகலப்பாக இருந்தோம் என்றார் மனநிறைவான மகிழ்ச்சியுடன், வடிவேலு.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை பார்த்துவிட்டு இரவு 11 மணிக்கு எனக்கு அழைப்பு விடுத்து பிரமாதம் என்று பாராட்டியதாக பெருமைப்பட்டார். அதேபோல், நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரும் அழைத்து பாராட்டியதாகவும் கூறிய வடிவேலு, எந்த இடத்திலும் சிரிக்கவே கூடாது என்ற நிலை எனக்கு மிகவும் சோதனையாக இருந்ததாக' கூற நிகழ்ச்சி மேடையே சிரிப்பலையில் மூழ்கியது.

இதையும் படிங்க: Maamannan:தனபால் இல்ல விருந்தை புறக்கணித்த ஈபிஎஸ்? மாமன்னன் குறித்து பேசுவதா..? - அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.