மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் முதல் பாடலான 'பொன்னி நதி' சில தினங்களுக்கு முன் வெளியாகியது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் பாடலை கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். இப்பாடல் குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதில், ''பொன்னி நதி பாடலை மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதினேன். இத்தனை காலமும் எங்கள் நெஞ்சில் சுமந்துகொண்டிருந்தோம். இது இப்படத்தில் நான் எழுதிய நான்காவது பாடல். (நான் எழுதிய முதல் பாடல், ஷூட்டிங் எல்லாம் முடிந்த பிறகு, படத்தில் இடம் பெற வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அது ஒரு காவிய சோகம். அது பற்றி தனியே சொல்கிறேன்)
ட்யூனாக முதல் முறை கேட்டபோதே மனதில் ஒட்டிக்கொண்டது இந்த, 'பொன்னி நதி' பாடல். லயா(கவிஞரின் மகள்) என்னைவிட விரைவாக அடிக்ட்டாகிவிட்டாள். மீட்டர் செட் செய்ய நான் திரும்ப திரும்ப ட்யூனை ஒலிக்கவிட்டதால், 'ஈகரி எசமாயி... ஈகரி எசமாயி' என வீடு முழுக்கப் பாடித் திரிந்தாள். அந்நாட்கள் அத்தனை இனிமையானவை.
இப்போது கேட்டுவிட்டு என்ன வேற என்னமோ பாடறாங்க என்கிறாள். விரைவில் இசை வெளியீட்டில் மற்ற பாடல்களும் வெளிவரும். சங்கம் முதல் சிற்றிலக்கிய காலம் வரை நம் மரபின் பல பாடல் மரபுகளை நவீன இசைக்குள் அமர வைக்க முயன்றிருக்கிறோம். இதுவரை தமிழ் சினிமா காணாத பல பழந்தமிழ்ச்சொற்கள் பாட்டேறியுள்ளன.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்திடுங்கள். வாழ்த்திய அனைவருக்கும் நன்றியும் அன்பும்., இணைந்திருப்போம்'' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான அதிதி ஷங்கர்!